476
பாரதியார் கதைகள்
நமக்கு மருமகனாயிருப்பதற்கு யோக்கியதை யுடையவனாகவே காணப்படுகின்றான். அவன் ஹிந்து மார்க்கத்தினின்றும் நீங்கிப் பிரம்ம சமாஜத்தில் சேர்ந்து கொள்ளும் பக்ஷத்தில் உங்களிருவருக்கும் விவாஹம் முடித்து வைப்பதில் எனக்கு யாதொரு ஆட்சேபம் கிடையாதென்று அவனிடம் தெரிவித்துவிடு” என்று சொல்லிச் சென்று விட்டார். இது முறையே மனோரஞ்சனனுக்குத் தெரிவிக்கப்பட்டது.
ஆயினுமென்ன பயன்? மனோரஞ்சனன் தான் பிரம் ஸமாஜத்தில் சேர்ந்து கொள்வானாயின் தனது தாய் மனமுடைந்து இறந்து போவாளென்பதை நன்றாக அறிவான். எனவே, தாயினிடத்து அன்பு ஒருபுறமும் ஸ்வர்ண குமாரியின் மீது மையல் மற்றொரு புறமும் அவனது மனதை இழுக்க இன்ன செய்வதெனத் தெரியாமல் திகைப்பா னாயினான். இவ்வாறே ஒன்றரை வருஷகாலம் கழிந்து விட்டது. இவன் கடைசிவரை பிரம்ம சமாஜத்தில் சேராமலே யிருந்துவிடும் பக்ஷத்தில் தான் விவாகம் செய்து கொள்ளாமலே யிருந்துவிட வேண்டுமென ஸ்வர்ண குமாரி நிச்சயித்துக் கொண்டிருந்தாள்.
இப்படியிருக்க 1906ம் வருஷம் கல்கத்தாவிலே காளிபூஜை திருவிழா நடந்து கொண்டிருந்த (நவராத்திரி) காலத்திலே ஸ்வர்ண குமாரி தனது வீட்டு அடியிலே ஒரு பஞ்சணை மீது சாய்ந்து கொண்டு "ஸந்தியா" என்னும் தினசரிப் பத்திரிகை படித்துக் கொண்டிருந்தாள். அதில் திடீரென அவளது கண்களுக்குப் பின்வரும் குறிப்புத் தென்பட்டது.
“சாந்த் பூர் வாசி யாகிய ஸ்ரீயுத மனோரஞ்ஜன் பானர்ஜி நேற்று மாலை பிரம ஸமாஜத்திலே சேர்ந்து விட்டார். இவர் மிகுந்த திறமையும் புகழுமுள்ள அதி வாலிபராதலால் இவர் ஹிந்து மார்க்கத்தினின்றும் பிரிந்து விட்ட விஷயம் எங்கே பார்த்தாலும் பேச்சாய் கிடக்கிறது.”
மேற்கண்ட வரிகளைப் படித்தவுடனே ஸ்வர்ண குமாரிக்குப் புளகமுண்டாய் விட்டது. ஆனந்த பரவசத்திலே