உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதியார் கதைகள்.pdf/477

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஸ்வார்ண குமாரி

477

அமிழ்ந்து விட்டாள். உடனே மற்றோரிடத்தில் மனோரஞ்சனனுடைய பெயர் காணப்பட்டது. அதென்ன வென்று பார்த்தாள். அதிலே,

“சென்ற சில தினங்களாக லோகமான்ய பாலகங்காதர திலகர் புனாவிலிருந்து நமது நகரத்திற்கு வந்து சுதேசீயம், ஸ்வராஜ்யம் என்ற பெரு விஷயங்களைப் பற்றிப் பதினாயிரக் கணக்கான ஜனங்களின் முன்பு உபந்நியாசங்கள் புரிந்து வருகின்றார். இவருக்கு நடக்கும் உபசாரங்களும் சிறப்புக்களும் முடியரசர்களுக்குக்கூட நடக்கமாட்டார். அப்படி யிருக்க இவருடைய கோட்பாடுகளுக்கு விரோதமாகச் சில வாலிபர்கள் சாந்த்பூர் ஸ்ரீ மனோரஞ்ஜன் பானர்ஜியின் அக்கிராசனத்தின் கீழ் ஒரு எதிர்க் கூட்டங் கூடி இந் நகரத்தின் ஏதோ ஒரு மூலையில் சில நிந்தனைத் தீர்மானங்கள் செய்து கொண்டார்களென அறிந்து விசன மடைகிறோம்” என இருந்தது.

இதைக் கண்டவுடனே ஸ்வர்ண குமாரிக்கு மனம் பதைத்து விட்டது. இவள் குழந்தை முதலாகவே ஸ்ரீ பாலகங்காதர திலகரைத் தெய்வம் போலக் கருதி வந்தவள். இவளுக்கு மனோரஞ்சனனிடமிருந்த அன்பைக் காட்டிலும் சுதேசத்தின் மீதுள்ள அன்பு பதினாயிர மடங்கு வன்மை யுடையது. சுதேச பக்தர்களின் திலகமாகிய பாலகங்காதர திலகருக்கு விரோதமாக உழைக்கின்ற ஸ்வஜன விரோதியினிடமா நாம் இத்தனை நாள் காதல் கொண்டிருந்தோம்? இவனையா மாசற்ற குமரனென் றெண்ணி மதி மயங்கினோம்?' என்று பலவாறு யோசித்து மிகவும் வருந்துவாளாயினாள். இவள் நிலைமை இங்ஙனமாக.

தன் கண் போல் வளர்த்த ஒரே ஆசைக் குமாரன் ஹிந்து மார்க்கத்தை விட்டு நீங்கி விட்டானென்று கேள்வியுற்ற வுடனே மனோரஞ்ஜன னுடைய தாய் மூர்ச்சித்து விழுந்து இறந்து போய் விட்டாள்.

இந்தச் செய்தி கேட்டவுடனே அலறிக்கொண்டு சாந்த்பூருக்கு வந்த மனோரஞ்ஜனன் தனது தாயின் கிரியைகளை