பக்கம்:பாரதியார் குயிற்பாட்டு.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 குயிற் பாட்டு இன்னிசைத்தீம் பாடல் இசைத்திருக்கும் விந்தைதனே முன்னிக் கவிதைவெறி மூண்டே நனவழியப் பட்டப் பகலிலே பாவலர்க்குத் தோன் அவதாம் நெட்டைக் க ைவின் நிகழ்ச்சியிலே கண்டேன் யான்; கன்னிக் குயிலன்று காவிடத்தே பாடியதோர் 25 இன்னிசைப் பாட்டினிலேயோனும் பரவசமாய், 'மனிதவுரு நீங்கிக் குயிலுருவம் வாராதோ 7 இனிதிக் குயிற்பேட்டை என்றும் பிரியாமல் காதலித்துக் கூடிக் களியுடனே வாழோமோ ? நாதக் கன லிலே நம்முயிரைப் போல் கோமோ ფ·· 30 என்று பல வெண் ணி ஏக்கமுறப் பாடிற்ருல்; அன்று நான் கேட்ட (து) அமரர்தாங் கோட்பாதே ? குக்குக்கு வென்று குயில் பாடும் பாட்டினிலே தொக்க பொருளெல்ல : ம் தோன் றியதென் சித்தைக்கே: அந்தப் பொருளை அவனிக் குரைத்திடுவேன்; 35 விந்தைக் குரலுக்கு; மேதினியீர்! என் செய்கேன்! 2. குயிலின் பாட்டு காதல் , காதல், காதல், காதல் போயிற் காதல் போயிற் சாதல், சாதல், சாதல் காதல் 1. அருளே யாம் நல் லொளியே: ஒளிபோ மாயின் , ஒளி போ மாயின், இருளே, இருளே, இருளே. காதல் 2. இன்பம், இன்பம், இன் பம்; இன் பத் திற்கோர் எஸ்&ல காணில், துன்பம், துன்பம், துன்பம் காதல் 3. நாதம் நாதம், நாதம்: நாதத் தேயோர் நலிவுண் டாயின், சேதம் சேதம் சேதம். காதல் 4. தானம், தாளம், தாளம்; தாளத் திற்கோர் தடையுண் டாயின், கூளம், கூளம், கூளம், காதல்