பக்கம்:பாரதியார் நூல்கள் ஒரு திறனாய்வு.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 கையாள்வது கத்தியின் கூர்முனையிலே நடப்பது போன்றதற்குச் சமானமாகும். அதிலே சிறிது வழுவி விட்டாலும் தவருக முடியும் என்றும், ஆனால் கவிஞர், கவி என்ற ஹோதாவில்தான் அப்பாடல்களை எழுதி யுள்ளார் என்றும் நயமாகக் குறிப்பிடுகின்ருர், ஆனால், "காற்று என்ற புதுக்கவிதையிலே அப்ப்டிப்பட்ட அப்பழுக்கில்லாத நாயகாநாயகி பாவத்தைக் கையாண்டு இருக்கிருர் என்பதைக் கீழே வரும் அடிகளில் காணலாம். “ஒரு வீட்டு மேடையிலே ஒரு பந்தல். ஒலைப் பந்தல். தென்ளுேலை. குறுக்கும் நெடுக்குமாக ஏழெட்டு மூங்கிற் கழிகளைச் சாதாரணக் கயிற்ருல் கட்டி மேலே தென்னங்கிடுகு களை விரித்திருக்கிறது. ஒரு மூங்கிற் கழியிலே கொஞ்சம் மிச்சக் கயிறு தொங்கு கிறது. ஒரு சாண் கயிறு. இந்தக் கயிறு, ஒருநாள் சுகமாக ஊசலாடிக் கொண் டிருந்தது. பார்த்தால் துளிகூடக்கவலை இருப்ப தாகத் தெரியவில்லை. சில சமயங்களில் அசையாமல் 'உம்'மென்றிருக்கும். கூப்பிட்டாற்கூட ஏனென்று கேட்காது. இன்று அப்படியில்லை. குஷால் வழியிலிருந்தது. எனக்கும் இந்தக் கயிற்றுக்கும் ஸ்நேஹம். நாங்கள் அடிக்கடி வார்த்தை சொல்லிக்கொள்வதுண்டு. 'கயிற்றினிடத்தில் பேசினல், அது மறுமொழி சொல்லுமா?" பேசிப்பார், மறுமொழி கிடைக்கிறதா இல்லையா என்பதை.