பக்கம்:பாரதியார் நூல்கள் ஒரு திறனாய்வு.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11 ஆளுல் அது ஸந்தோஷமாக இருக்கும் ஸமயம் பார்த்து வார்த்தை சொல்லவேண்டும. இல்லாவிட்டால். முகத்தைத் துக்கிக்கொண்டு சும்மா இருந்துவிடும். பெண்களைப்போல. எது எப்படியிருந்தாலும், இந்த வீட்டுக் கயிறு பேசும் அதில் ஸ்ந்தேகமேயில்லை. ஒரு கயிரு சொன்னேன்? இரண்டு கயிறு உண்டு. ஒன்று ஒரு சாண்; மற்ருென்று முக்கால் சாண். ஒன்று ஆண் மற்ருென்று பெண்; கணவனும் மனைவியும். அவையிரண்டும் ஒன்றையொன்று காமப் பார்வைகள் பார்த்துக்கொண்டும், பு ன் சி ரி ப் பு ச் சிரித்துக் கொண்டும், வேடிக்கைப் பேச்சுப் பேசிக் கொண்டும் ரஸம் போக்கிலேயிருந்தன. அத் தருணத்திலே நான் போய்ச் சேர்ந்தேன். ஆண் கயிற்றுக்குக் கந்தன்' என்று பெயர். பெண் கயிற்றுக்குப் பெயர் வள்ளியம்மை’ (மனிதர்களைப் போலவே துண்டுக் கயிறுகளுக்கும் பெயர் வைக்கலாம்.) கந்தன் வள்ளியம்மைமீது கையைப் போட வருகிறது. வள்ளியம்மை சிறிது பின்வாங்குகிறது. அந்த ஸந்தர்ப் பத்திலே நான் போய்ச் சேர்ந்தேன். "என்ன, கந்தா, லெளக்கியம்தாளு? ஒருவேளை, நான் ஸந்தர்ப்பந்தவறி வந்துவிட்டேனே. என்னவோ! போய், மற்ருெரு முறை வரலாமா?” என்று கேட்டேன். அதற்குக் கந்தன் :-"அடியோடா, வைதிக மனுஷன்! உன் முன்னேகூட லஜ்ஜையா? என்னடி, வள்ளி, நமது