பக்கம்:பாரதியார் நூல்கள் ஒரு திறனாய்வு.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 ஸல்லாபத்தை ஐயர் பார்த்ததிலே உனக்குக் கோபமா?’ என்றது. "சரி, சரி. என்னிடத்தில் ஒன்றும் கேட்க வேண்டாம்" என்றது. வள்ளியம்மை. அதற்குக் கந்தன். கடகடவென்று சிரித்துக் கைதட்டிக் குதித்து. நான் பக்கத்திலிருக்கும்போதே வள்ளி யம்மையைக் கட்டிக் கொண்டது. வள்ளியம்மை கீச்சுக் கீச்சென்று கத்தலாயிற்று. ஆனல், மனதுக்குள்ளே வள்ளியம்மைக்கு ஸந்தோஷம். நாம் சுகப்படுவதைப் பிறர் பார்ப்பதிலே நமக்கு வந்தோஷந்தானே? இந்த வேடிக்கை பார்ப்பதிலே எனக்கும் மிகவும் திருப்தி தான். உள்ளதைச் சொல்லிவிடுவதிலே என்ன குற்றம்? இளமையின் ஸல்லாபம் கண்ணுக்குப் பெரிய தோர் இன்பமன்ருே? இங்ங்னம் மகாகவி பாரதியார் புதுக்கவிதையிலும் வழிகாட்டியாக நிற்கிருர். அது மேலும் மேலும் உருவகம், சிம்பாலிசம் (Symbolism) முதலிய அணிகளைத் தாங்கிப் பொருள் பொதிந்து விளங்கினல் நன்கு சிறப் படையும். பாரதியாரே சிறப்பில்லாத சில புதுக்கவிதையும் இயற்றியுள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.