பக்கம்:பாரதியார் நூல்கள் ஒரு திறனாய்வு.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியாரின் தேசபக்திப் பாடல்கள் பாரதியாருக்கு முன்பு, உணர்ச்சி பொங்கும், தனித் தனியான சிறுசிறு தேசபக்திப் பாடல்கள் இல்லையென்றே சொல்லலாம். இந்தக் குறையை உணர்ந்து பாரதியாரே ஒரு விண்ணப்பம் விடுத்திருக்கிருர். அப்படிப்பட்ட பாடல்கள் புனைந்து அனுப்பவேண்டுமென்று ஒரு விண்ணப்பம் 1906, பிப்ரவரி 13-ல் விடுத்திருக்கிரு.ர். அந்த விண்ணப்பம் வருமாறு: "எமது தாய்நாடாகிய பார தாம் பி ைக யி ன் பெருமையை வருணித்து ஆங்கிலத்திலும் தமிழிலும் பல்வேறு காலத்துப் பல்வேறு புலவர்களால் பாடப்பெற்ற செய்யுள் மணிகளை ஒர் மாலேயாகப் புனைந்து பதிப்பிக்கக் கருதியிருக்கின்றேளுதலின் பண்டைத் தமிழ் நூல்களில் பாரதநாடு முழுதினையும் ஒருங்கே புகழ்ந்து கூறப் பட்டிருக்கும் பாடல்களை அறிஞர் தெரிந்தனுப்புவார் களாயின் அவர்மாட்டு மிக்க கடப்பாடுடையவனுவேன். தமிழ்ப் புராணங்களிலும் இதிகாசங்களிலும் நாட்டுப் படலங்களில் நிடதம், கோசலம் முதலிய பகுதிகளைப் பற்றி எழுதப்பட்டிருக்கும் வருணனைகள் பயன்படமாட்டா. தற்காலத்தே தமிழ்ப் புலமையிற் சான்று விளங்கும் பெரு