பக்கம்:பாரதியார் நூல்கள் ஒரு திறனாய்வு.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 மக்கள் புதியனவாகத் தேசபக்திப் பாக்கள் புனைந்தனுப்பு வாராயின் அவையும் நன்றியறிவுடன் ஏற்றுக் கொள்ளப் படும். சிறிய ஆற்றலுடையேனுகிய யான் இப்பெரிய தொழிலை நிறைவேற்றுவதன்கண்ணே எவ்வாற்ருனும் துணைபுரிய விரும்புவோர் கால பரியயம் செய்யலாகா தென்று பிரார்த்திக்கின்றேன்.” இங்ங்னம், சி. சுப்ரமணிய பாரதி விலாசம் : சுதேசமித்திரன்-ஆபீஸ், சென்னை. குறிப்பு : இவ்விண்ணப்பம் மறு முறையும் 28 பிப்ரவரி1906-ல் ஓர் சுதேசீய விண்ணப்பம்’ என்ற தலைப்புடன் வெளியாகியுள்ளது. தமிழனுக்கு இரண்டாம் முறையாக விண்ணப்பம் விடுத்தும் அது கண்ணில் படவில்லையோ என்னவோ, அல்லது தாழ்வு மனப்பான்மையாலே கும்பகர்ணனுக்கு உறக்கம் வந்ததுபோல் உறங்கிக் கிடந்தார்களே என்னவோ! பாரதியாரே இதைப்பற்றி ஒரு நையாண்டியாக ஒரு கட்டுரை எழுதியிருக்கிரு.ர். நாட்டுப்படலம், நகரப்படலம் என்பவை மிக உயர்வு நவிற்சியாக எழுதப்பட்டிருப்பதால் அவை வேண்டா என்று முன்னமேயே நல்லவேளையாக எச்சரித்திருக்கிரு.ர். ஒருவேளை, அதிவீரராம பாண்டியன் எழுதிய ஒரு பாடல் அவரது நினைவிற்கு வந்தது போலும். நாட்டுப் படலத் திலேயுள்ள, நாட்டைச் சுற்றி நான்கு புறமும் சூழ்ந் துள்ள மதிலைப்பற்றிய ஒரு பாடலை மட்டும் இங்குக் கவனிப்போம்.