பக்கம்:பாரதியின் இலக்கியப் பார்வை.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதியின்


 பாரதியார் திருக்குறள்களையே மிகுதியான இடங்களில் மேற்கோளாக அமைத்துள்ளார். அவற்றையும் தமது கட்டுரைகளிலே மிகுதியாகக் காணலாம்; கவிதைகளில் குறட்பாவையும் குறட் கருத்தையும் பின்னியுள்ளார்.

தனது வரலாற்றைக் கூறும் “சுய சரிதை” (43)யில்

“பொருளி லார்க்கிலை யிவ்வுல” கென்ற நம் புலவர் தமிழ்மொழி பொய் மொழி யன்றுகாண்.

-எனத் திருக்குறள் (247) தொடரை அமைத்தார்.

பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்” (580) என்னும் குறளின்

கருத்தை, ‘அச்சமில்லை’ தலைப்பில் அமைந்த ‘பண்டாரப் பாட்டில்’,

நச்சைவாயி லேகொணர்ந்து நண்ப சூட்டுபோதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே”

என அமைத்தார்.

கட்டுரைகளில் திருக்குறள் மேற்கோள் பல்லிடங்களில் பாரதியால் அமைக்கட்பட்டுள்ளது. சான்றிற்கு ஒன்று:

“......... புத்தகத்துக்கும் வாய்ப்பேச்சுக்கும் செய்கைக்கும் இடையே இலட்சம் யோசனை தூரமாக நடப்பவர்களுக்குத் திருட்டாந்தம் காட்டப் புகுமிடத்தே... ......”

“கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு சொல் வேறு பட்டார் தொடர்பு -என்று” திருவள்ளுவர் பாடியிருக்கிறார்.

58