பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. கொள்கையும் செய்கையும் TTE

இயற்கை உரம் குறைந்து நிலத்தின் சாரம் பாதிக்கப் பட்டிருக்கிறது. கடனுக்கு வட்டியும் கூடுதல் வட்டியும் அதிகரித்து வாங்கிய கடனைத் திருப்பிக் கட்ட முடியாத நிலை பெரும்பாலான விவசாயிகளுக்கு ஏற்பட்டிருக்கிறது. விதைகளில் பழைய பாரம்பரியமான இந்த மண்ணுக்கேற்ற விதைகள் மறைந்து போயின. விதை உற்பத்தி விதை வினியோகம் பற்றி புதிய முயற்சிகள் புதிய கொள்கை தேவைப்படுகின்றன.

நாடு விடுதலை அடைந்த பின்னர் விவசாயத்துறை ஆராய்ச்சி அதிகரித்துள்ளன. விவசாயக் கல்லூரிகள், விவசாயப் பல்கலைக் கழகங்கள், விவசாய ஆராய்ச்சிப் பண்ணைகள், விதைப் பண்ணைகள், பால், முட்டை, பழச்செடிகள், மலர் உற்பத்தி காய்கறி உற்பத்தி அதிகரித்துள்ளன. நமது நாட்டு ஆராய்ச்சி அதிகரித்து புதிய கண்டு பிடிப்புகள் வந்துள்ளன. விஞ்ஞானக் கண்டு பிடிப்புகளுக்கும் விவசாயிகளின் சாகுபடித் தொழிலுக்கும் நேரடியான தொடர்பும் இணைப்பும் ஏற்பட வேண்டும்.

நமது நாட்டின் இன்றைய கணக்குப் படி நிலமுள்ள விவசாயிகளில் குறு, சிறு, நடுத்தர விவசாயிகள்தான் அதிகம். இவர்களுடைய பொறுப்பில் சாகுபடியில் நாட்டில் மொத்தமுள்ள நிலத்தில் எண்பது சதவீதத்திற்கும் மேல் இருக்கிறது. எனவே இந்த குறு, சிறு, நடுத்தர விவசாயிகளின் நில உற்பத்தியை அடிப்படையாகக் கொண்டு விவசாய உற்பத்தியைப் பெருக்க, விவசாயப் பொருளாதாரத்தில் கிராமப் பொருளாதாரத்தில் அபிவிருத்தி காணுவதற்கான முறையில் விவசாயக் கொள்கை அமைய வேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக விவசாயிகளின் விளை பொருளுக்குக் கட்டுபடியாகும் விலை இல்லாமை தான் முக்கியமான பிரச்னையாக உள்ளது. அதுதான் இன்றைய நிலையில்