பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

TTTLLS LLLLL LL TLLLLy LCCLL LLLLLLLLLLLLLLLLLSK LLLLLLL SCC

விடுதலை நிறைவேற வேண்டுமாயின் அதற்கு பாரத தேசத்தின் விடுதலை இன்றியமையாத மூலாதாரமாகும். இங்ங்னம் பாரத தேசம் விடுதலை பெற வேண்டுமாயின் அதற்கு தேசியக் கல்வியே ஆதாரம்” என்று தேசிய விடுதலையின் விரிவடைந்த பொருளில் தேசியக் கல்வியை இணைத்து பாரதி குறிப்பிடுகிறார்.

பாரதி குறிப்பிடும் தேசீயக் கல்வி த்திட்டத்தை நிறை வேற்றுவது எப்படி? அதற்கு அன்னிய ஆட்சியை நம்பியிருக்க முடியாது. அதிலும் குறிப்பாக சரியான பாடத் திட்டத்தை உருவாக்குவது என்பது அன்னிய ஆட்சியை வைத்துச் சாத்தியமேயில்லை. இன்று கூட எல்லோருக்கும் கல்வி என்னும் திட்டத்தை நிறைவேற்ற அரசை மட்டும் நம்பியிருக்க முடியாது. அது சாத்தியமும் அல்ல. நூறு கோடி மக்களையும், பல மொழிகளையும் பேசும் மக்களையும் கொண்ட பரந்த பாரத தேசத்தில் அனைவருக்கும் கல்வி என்பது, அதிலும் ஆரம்பக் கல்வி மட்டுமல்ல, அனைத்துக் கல்வியும் கொடுக்க வேண்டும் என்பது ஒரு பிரம்மாண்டமான பணியாகும். எனவே இம்மகத்தான பணியில் பல பகுதி மக்களும் மக்கள் அமைப்புகளும் சபைகளும், ஆர்வலர்களும் தேசியக் கல்வியைப் பரப்ப முயற்சிகள் செய்ய வேண்டும்.

ஏற்கனவே நமது நாட்டில் முன்பு குருகுலங்கள், திண்ணைப் பள்ளிக் கூடங்கள் ஏராளமான அளவில் இருந்தன. போதுமான அளவில் அவை கல்வித் தேவைகளை நிறைவேற்றின. பெரிய பல்கலைக் கழகங்களும் இருந்தன. இன்றைக்கு புதிய நோக்கில் நமது பாடத் திட்டங்களையும் அமைத்து, விரிவான முறையில் தேசியக் கல்வியைப் பரப்ப வேண்டும். இதில் பல அமைப்புகளும் யாவரும் பங்கு கொள்ள வேணும்.

xx xx xx