பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25-ஜாதிபேத-விநோதங்குள் 176

2 5.ஜாதிபேத விநோதங்கள்:

பிராமணர் - பிராமணர் அல்லாதார் என்று பேசுவது பற்றியும் ஆரியர் திராவிடர் என்று பேசுவது பற்றியும் அதில் உண்மையில்லை என்பது பற்றியும் ஜாதிபேத வினோதங்கள் என்னும் தலைப்பில் பாரதி தனது கருத்துக்களை உண்மை நிலையை தெளிந்து தனது கட்டுரையில் எழுதியுள்ளார். அக்கட்டுரையில் பிராமணரல்லாதார் என்ற வகுப்பே கிடையாது. அதுவே பொய். எனவே இந்தக் கிளர்ச்சியின் மூலமே பொய்யாக இருப்பது கொண்டு இதனை உண்மையில்லாத கிளர்ச்சி என்கிறேன். உண்மையாகவே இந்தியாவில் ஜாதி பேதங்களில்லாமல் சமத்துவக் கொள்கை வெற்றியடைய வேண்டுமென்றால் அதற்கு ஸ்வராஜ்ய ஸ்தாபனமே சரியான உபாயம். ஸ்வராஜ்யம் கிடைத்தால் சட்ட சபைகளில் எல்லா ஜாதி மேதாவிகளும் கலந்திருப்பார்களாதலால் அந்தச் சபைகளின் மூலமாக் இந்தியாவில் முதலாவது ராஜரீக வாழ்வில் சமத்துவக் கொள்கையை நிறுத்தி விடலாம். பிறகு சமூகவாழ்விலும் சமத்துவக் கொள்கை தானே பரவிவிடும். இதை விட்டுப் பொய்யும் புலையுமாக திராவிடர்கள் என்றும் ஆரியர் என்றும் உள்ள பழைய சொற்களுக்குப் புதிய அபாண்டமான அர்த்தங்களைக் கற்பித்துக் கொண்டு வீண் சண்டைகள் வளர்ப்பதினால் ஹிந்து சமுதாயத்துக்கே கெடுதி விளையக்கூடும். எந்த வகுப்புக்கும் அனுகூலம் ஏற்படாது” என்று பாரதி மிகவும் தெளிவாகக் குறிப்பிடுகிறார். m

இந்த ஆரியர்-திராவிடர் மாயையும், பொய்யும், பிராமணர்-பிராமணரல்லாதார் மாயையும், பொய்யும் தமிழ்நாட்டை நல்ல வழியில் கொண்டு செல்லவில்லை. தமிழ் நாட்டில் ஹிந்து சமுதாயத்திற்கு கேடுகளையே விளைவித்திருக்கிறது. எதிர் மறையான சிந்தனைகளையே வளர்த்துவிட்டு தமிழ் மக்களைத் தனிமைப் படுத்தியிருக்கிறது. தமிழகத்தில் 1967-ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக திராவிடமே ஆண்டு கொண்டிருக்கிறது. இங்கு தேனும் பாலும் ஒடவில்லை. பின்னுக்குத்தான் சென்றிருக்கிறது. சொந்த முயற்சியில் கடுமையாக உழைத்து அசைந்து கொண்டி -ருக்கிறோம். விழிப்படைய வேண்டும்.