பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35. ■ சக் - - - F- 224

-

பார்க்க வேண்டும். அங்ங்ணம் சாதனை செய்தவர்களுக்குப் பலவித ஆபூர்வ சக்திகள் உண்டாயிருப்பதைக் கண்ணாரக் காண்கிறோம்.

நமக்கும் ஏன் இந்த சக்தி ஏற்படக் கூடாது? இந்த மூடத் -தனமான குணத்தால் என்ன சுகங்கள் கண்டு விட்டோம்? சோம்பராலும், அற்ப விஷயங்களிலே ஆசைகொண்டு மனதைக் கடலில் அகப்பட்ட துரும்பு போலச் சலிக்க விடுவதாலும் என்ன பேறுகள் பெற்று விட்டோம்?

"துணிவு, உள்ளத் துய்மை, ஏதாவதொரு மகத்தான லட்சியத்திலே அறிவை, ஆணி கொண்டடித்தது போலப் பற்றுறச் செய்து கொள்ளுதல், லாப நஷ்டங்களிலே சிந்தனையில்லாமை, இவைதான் யோகத்தின் இரகசியம்” என்று மகாகவி எழுதுகிறார்.

நெடுங்காலமாக உறங்கி நின்ற சுதேச மாதா இப்போது கண் விழித்திருக்கிறாள். நமது நாடு மறுபடியும் பூர்வ கால மகிமைக்கு வருவதற்குரிய அறிய முயற்சிகள் செய்து வருகின்றது என்று கூறுகிறார்.

“ஒரு தேசத்தார் ஞானமும் செல்வமும் வீரமும், புகழும் கொண்டு உன்னத நிலையில் இருக்கும்போது அவர்களுக்குள் ஆண் மக்களிடம் மட்டுமேயல்லாது பெண் பாலரிடத்திலும் கூட தர்மாபிமானமும் வீரதன்மையும் விளங்கும் என்று குறிப்பிடுகிறார். இதற்கு பாரத நாட்டில் எண்ணற்ற உதாரணங்கள் உள்ளன. ராஜ புத்திரத் தாய்மார்கள் மானத்திற்காகவும் தர்மத்திற்காகவும் கற்பிற்காகவும் செய்திருக்கும் வீரச் செயல்களை உலகம் போற்றி வியந்திருக்கிறது. தமிழ்த் தாய்மார்கள் காட்டியுள்ள வீரத்தைப் புறநானூற்றுப் பாடல்கள் எடுத்துக் கூறுகின்றன.