பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக்கருத்துக்கள்-ஆ-சீனிவாசன்ட223

விஷயங்களிலே சிரத்தையுடன் செலுத்தி உழைப்பதனால் சக்தி உண்டாகிறது. இங்ங்ணம் சிறிது சிறிது ஏற்படும் சக்தியினாலேதான் உலகத்தில் மனிதர்கள் ஜீவித்திருக்கிறார்கள்.

தமிழ் ஜனங்களுக்குள் சக்தி மேம்மேலும் பெருகச் செய்ய வேண்டும் என்பது நமது நோக்கம். இந்த நோக்கத்தை நிறைவேற்றும் பொருட்டாகவே நாம் உயிர் தரிக்கிறோம். மாதா இந்த நாட்டு ஜனங்களுக்கு சக்தி யதிகரிக்கும்படி செய்க. அக்காரியத்தை நிறைவேற்றுவதற்குரிய சக்தியை எனக்கு அருள் புரிக' என்று நம்மில் ஒவ்வொருவரும் தியானம் புரிய வேண்டும்.

ஆட்டம் ஆடுதல், கூத்து முதலியவை, மற்போர் முதலிய வற்றிலே பழகுதல், பாடுதல், தர்க்கம், வாதம், தவம், பிரமசரியம், சுத்தம் முதலியவற்றில் ஓர் ஜாதிக்கு சக்தி அதிகப் படுகிறது. மனம், வாக்கு, செயல் மூன்றும் சுத்தமாக இருக்க வேண்டும். உள்ளும் புறமும் மாசில்லாது செய்யப் பழக வேண்டும். பயம், சந்தேகம், சலனம், மூன்றையும் வெறுக்க வேண்டும். இதனால் சக்தி ஏற்படும்.

புராதன சம்பிரதாயம் என்பதால் மட்டுமே ஒன்று பொய்யாகி விட மாட்டாது, புதியது என்பதால் மாத்திரமே ஒன்றை மெய்யாகக் கொண்டு விடுதலும் பிழை. ஆராய்ந்து அனுபவத்தால் பார்க்கு -மிடத்தே தான் ஒரு விஷயத்தின் மெய்ம்மையும், பொய்மையும் விளங்கும். நமது முன்னோர்கள் “யோகம்” என்றதோர் மார்க்கம் ஏற்படுத்தியிருக்கிறார்கள். இஃது ஹடயோகம், ராஜ யோகம், பக்தி யோகம், ஞான யோகம் என நான்கு வகைப்படும். இவற்றில் ஹடயோகம் தான் மிகக் குறைந்த பயன் தரக் கூடியது. மற்ற மூன்றிலும் அனந்த சக்திகள் பெறலாம். விஷயம் தெரியுமுன்பாக இதில் பயன் என்ன விளையப்போகிறது என்று சந்தேகப் படுதல் தெளிந்தோர் செய்யும் காளியம் அன்று. அவற்றை ஆராய்ச்சி செய்து