பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக்கருத்துக்கள்-அ. சீனிவாசன்-249

இராஜபாளையம் நகரசபைத் தேர்தலில் வார்டு உறுப்பினர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று நகரசபை உறப்பினராகச் சிறப்பாகப் பணியாற்றியுள்ளார்.

1984-ம் ஆண்டிலும் 1991-ம் ஆண்டிலும் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் சிவகாசி பாராளு மன்றத் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவுடன் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக திரு. அ. சீனிவாசன் போட்டியிட்டு ஒவ்வொரு தடவையிலும் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தைப் பெற்று குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார். இருதடவைகளிலும் முறையே இந்திரா காந்தி படுகொலை, ராஜிவ் காந்தி படுகொலை அதனால் ஏற்பட்ட அனுதாப அலை அவருக்கு பாதகமாக இருந்தது.

திரு. அ. சீனிவாசன் சிறந்த சிந்தனையாளர், எழுத்தாளர், பத்திரிகையாளர், நூலாசிரியர், சிறந்த பேச்சாளர், இராணுவ சேவை அனுபவம் பெற்றவர். தொழிற்சங்கத் தலைவராகப் பணியாற்றி அனுபவம் பெற்றவர். பல நாடுகளுக்கும், இந்திய நாட்டில் பல மாநிலங்ககளுக்கும் சென்று சுற்றுப் பயணம் செய்து அனுபவம் பெற்றவர். தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகள் அறிந்தவர். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டிருந்த காலத்தில் 1948-50ம் ஆண்டு காலத்தில் கடுமையான போலிஸ் அடக்கு முறைக்கும் சித்திரவதைக்கும் கொடுமையான சிறைவாசத்திற்கும் உட்பட்டு மதுரை, சேலம் சிறைகளில் கடும் தண்டனை அனுபவித்து தியாகத் தழும்புகள் ஏறியவர்.