பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோற்றுவாய் 32

இக்காலத்திற்கு மிகவும் அவசியம். கல்வி பற்றியும், பாடத்திட்டங்கள் பற்றியும், மகாகவி கூறியுள்ள கருத்துக்கள், இக்காலத்திற்கும், எக்காலத்திற்கும் பொருத்தமுடையனவாகும்.

இன்னும் பாரதி, வறுமை ஒழிப்பு, பட்டினியைப் போக்கல், அன்பு வழி, மனித மேம்பாடு, உலக வாழ்க்கையின் பயன், உழைப்பு, பத்திரிகைகள் பற்றி, சுதேசி முயற்சி, பிராமணன் யார்? வருங்காலம், தொழிலாளர், உடற்பயிற்சி, குற்றங்கள், தண்டனை கொல்லாமை, ஜீவகாருண்யம், அநந்தமான சக்தி, செல்வம், காலனிக் கொள்ளை முதலிய பலவேறு தலைப்புகளில் சிறந்த பல நல்ல கருத்துக்கள் நிறைந்த கட்டுரைகள் மிகவும் எளிய சாதாரண உரைநடையில் எழுதியுள்ளார். அக்கட்டுரைகளில் உள்ள முக்கியமான கருத்துக்களைப் பற்றியும், அவைகளின் இக்காலப் பொருத்தங்கள் பற்றியும் எடுத்துக் காட்டி, இந்த நூலில் பாரதியின் உரைநடைப் பகுதிகளின் சிறப்புகள் பற்றி எடுத்துக் கூறப்பட்டிருக்கிறது.

பாரதியின் கட்டுரைகளை, பாரத நாட்டின் இதர மொழிகளிலும், உலக நாடுகளின் இதர மொழிகளிலும் சிறப்பாக ஆங்கிலத்திலும் மொழியாக்கம் செய்து பாரதம் முழுவதும் அறியச் செய்ய வேண்டும். உலகம் முழுவதும் அறியச் செய்ய வேண்டும். இப்பணியில் நல்லோர் பலரும் வல்லோர் பலரும், வசதியுள்ளோர் பலரும் ஈடுபடவேண்டும்.

பாரதியின் கவிதைகளைப் போலவே, அவருடைய உரைநடைப் பகுதிக் கட்டுரைகளையும் ஊரறிய, நாடறிய, உலகரியச் செய்ய வேண்டும்.