பக்கம்:பாரதியின் உரைநடையில் அரசியல் மற்றும் சமுதாயக் கருத்துக்கள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியின்-உரைநடையில் அரசியல் Чедоре *ФрёытшёвФёёкьввт–<ы._osoflsuтаosoft 51

பாரதியார் ஒரு மகாகவி. உலகத்தின் உயிர் ஒலியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர். அவர் பாரத நாட்டின் தலை சிறந்த விஞ்ஞானியான றுநீஜகதீஷ் சந்திர வஸ்ஸுவின் உள்ளத்துடிப்பை முழுமையாக அடையாளம் கண்டார். மகாகவி பாரதியார், றுநீஜகதீஷ் சந்திர வளUசவை நவீன கால விஞ்ஞானியாக மட்டுமல்ல, அவர் வடிவில் பாரதத்தின் பாரம்பரியமான ஒரு மகா ஞானியையும் அடையாளம் கண்டார். அதனால் பாரதி, ஹறிந்துஸ்தானத்தை வணங்குகிறேன். ஹறிந்து தர்மத்தைப் போற்றுகிறேன். லோக நன்மைக்காக என்னை மறந்து என்னை இரை கொடுப்பேன்”, என்று உலக விடுதலைக்கான மகத்தான வாக்கியங்களைக் கூறுகிறார்.

பாரதியார், பாரத நாட்டின் விடுதலையைப் பற்றி நினைக்கும் போது வெறும் ஆட்சி மாற்றங்களைப் பற்றி மட்டும் குறிப்பிடவில்லை. உலகில் உள்ள அனைத்து மக்களின் அனைத்து உயிர்ப் பொருள்களின் முழுமையான விடுதலையைப் பற்றி சிந்திக்கிறார். மகத்தான ஹிந்து தர்மத்தின் மூலம் உலகம் முழுமையையும் விடுவிக்க வேண்டும் என்று விரும்புகிறார்.

xʻx xʻx XX