பக்கம்:பாரதியின் தேசீயம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியின் தேசீயம் -அ. சீனிவாசன் 30 சொல்லியிருப்பதையும் - 41 விளையாட்டிலும், படுக்கையிலும், இருப்பிலும், உணவிலும் தனி இடத்தேனும், அன்றி (மற்றவர் முன்னேயெனினும்)நான் உனக்கு வேடிக்கையாகச் செய்திருக்கும் அவமதிப்புகளையும் அவற்றையெல்லாம் பொறுக்கும் படி வேண்டுகிறேன் அளவற்றோய்! — 42. சராசரமாகிய இவ்வுலகத்துக்கு நீ தந்தையாவாய், இவ்வுலகத்தால் தொழத்தக்கனை, மிகவும் சிறந்த குரு நீ உனக்கு நிகர் யாருமில்லை. எனில் உனக்கு மேல் வேறு யாவர்? மூன்று உலகங்களிலும் ஒப்பற்ற பெருமை உடையவனே! - 43. ஆதலால் உடல் குனிய வணங்கி நின்பால் அருள் கேட்கிறேன். ஈசா, வேண்டுதற்குரியாய், மகனைத் தந்தை போலும், தோழனைத் தோழன் போலும் அன்பனையன்பன் போலும் நீ என்னைப் பொறுத்தல் வேண்டும் - 44. இதற்கு முன் காணாததை இன்று கண்டு மகிழ்ச்சியுறுகிறேன். எனினும் என் மனம் அச்சத்தால் சோர்கிறது. தேவா எனக்கு நின் முன்னை வடிவத்தைக் காட்டுக. தேவேசா ஜகத்தின் நிலையமே, எனக்கருள் செய் - 45. முன் போலவே கிரீடமும் தண்டும் கையில் சக்கரமுமாக நின்னைக் காண விரும்புகிறேன். அகில மூர்த்தியே, ஆயிரத்தோளாய் முன்னை நாற்றோள் வடிவினை எய்துக - 46. பூரிபகவான் சொல்லுகிறான்: அர்ஜுனா, யான் அருள் கொண்டு ஆத்ம யோகத்தால் எனது பர வடிவை நினக்குக் காண்பித்தேன். ஒளி மயமாய் அனைத்து மாய், எல்லையற்றதாய், ஆதியாகிய இவ்வடிவத்தை இதற்கு முன் உன்னைத் தவிர வேறு யாரும் பார்த்ததே கிடையாது - 47.