பக்கம்:பாரதியின் தேசீயம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரத தேவியின் சம்பூரணரூபம் 36 பாரதநாடு பழம்பெரும் நாடாக அதை நாரத கானம் திகழும் நாடாக நல்லன அனைத்தையும் நாடும் நாடாக, பூரண கானம் பொலிந்த நன்னாடாக, புத்தர் பிரான் அருள் பொங்கிய நாடாகக் காண்கிறான். பாரதத்தாயின் பிரம்மாண்டமான பெருவடிவம் பாரதியின் கண்களுக்கு முன்பாக மீண்டும் மீண்டும் காணப்படுகிறது. அந்தப் பேருருவத்தில் இலங்கை அரக்கர்களை அழித்து முடித்த ஆரியராணியின் வில் கோதண்டம் தென்படுகிறது. இந்திர சித்தனை இரண்டு துண்டாக எடுத்த இராம பாணம் தென்படுகிறது. ஒன்று பாம்பொருள், நாமதன் மக்கள், உலகம் இன்பக் கேணி, என்று மிக நல்ல பல வேதங்களை எழுதிய பாரத நாயகியின் திருக்கை தென்படுகிறது. த்ெதயம் இவ்வுலகம் என்னும் உறுதி நமது சித்தத்தில் ஆங்கி விட் பல் துன்பம் அனைத்தையும் வெல்லலாம் என்று சொன்ன ஆரிய ராணியின் சொல் தென்படுகிறது. சகுந்தலை பெற்ற தோர் பிள்ளை சிங்கத்தினைத் தட்டி விளையாடிய பிள்ளை பாரத ராணி ஒளியுறப் பெற்ற பிள்ளை காணப்படுகிறான். நாம் எல்லாம் ஒரு மேய்ப்பவன் பின்னால் செல்லும் ஆட்டு மந்தை என்று நமது சாத்திரங்கள் கூறவில்லை. துன்பங்களையும், கொடுமைகளையும் பாவச் செயல்களையும் எதிர்த்துச் சீறி எழும் சிங்கங்களாகவே பாரத தேவியின் சொற்கள் எடுத்துக் கூறுகின்றன. இன்னும் பாரத தேவியின் அந்தப் பெரு வடிவத்தில், காண்டிபம் ஏந்தி உலகினை வெற்றி கொண்டு நம்மை ஆண்டருள் செய்து பெற்று வளர்த்த ஆரிய தேவியின் தோள்கள் தென் படுகின்றன.