பக்கம்:பாரதியின் தேசீயம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியின் தேசீயம் -அ. சீனிவாசன் 41 | நண்ணிய பெருங்கலைகள் பத்து நாலாயிரம் கோடி நயந்து நிற்கும் புண்ணியத்திரு நாட்டில் இவர் பொறியற்ற விலங்குகள் போல வாழ்வார், என்று மனம் வேதனைப் படுகிறார். கெட்ட கனவுகள் வந்து போவதைப் போல போகின்ற பாரதத்தை வலிமையற்ற தோளினாய், மார்பிலே ஒடுங்கினாய், பொலிவிலா முகத்தினாய், பொறியிழந்த விழியினாய் ஒலியிழந்த குரலினாய், ஒளியிழந்த மேனியாய் கிலி பிடித்த நெஞ்சினாய் கீழ்மை கீழ்மையென்றும், வேண்டுவாய் போ, போ, போ என்று விரட்டுகிறார். நல்ல கனவுகள் தோன்றுவதைப் போன்ற வருகின்ற பாரதத்தை வா, வா என்று சிந்திக்கிறார். ஒளி படைத்த கண்ணினாய், உறுதி கொண்ட நெஞ்சினாய், களி படைத்த மொழியினாய், கடுமைக்கொண்ட தோளினாய், தெளிவு பெற்ற மதியினாய், சிறுமை கொண்டு பொங்குவாய், எளிமை கொண்டு இரங்குவாய், ஏறு போல் நடையினாய் வா, வா, வா. என்று அழைக்கிறார். கோடி கோடியாக நிற்கும் பாரத மக்கள் முழுமையையும் ஒரே சங்கமாக ஒரே குடும்பமாக ஒப்பில்லாத சமுதாயமாக அனைவருக்கும் அனைத்தும் பொது உடைமையாக, உலகத்திற்கொரு புதுமையாக, எல்லாரும் எல்லாப் பெரும் செல்வமும் எய்தி இல்லாரும் உடையாரும் இல்லாத கம்பன் கண்ட சமுதாயத்தை பாரதி தனது கூர்மையான கண்கள் மூலம் ஒரு புதிய சமுதாயக் காட்சியை பாரத சமுதாயத்தின் அற்புதமான காட்சியைக் காண்கிறார். பங்கிம் சந்திரளின் வந்தே மாதர கீதம் பாரதியின் காதுகளில் ஒலிக்கிறது.