பக்கம்:பாரதியின் தேசீயம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியின் தேசியம் -அ. சீனிவாசன் ЕШ _ 1948-49 ம் ஆண்டுகளில் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட போது, திரு. அ. சீனிவாசன் கைது செய்யப்பட்டு கொடுமையான சித்திரவதைக்கும், அடக்குமுறைக்கும் கொடும் தண்டனைகளுக்கும் ஆளானார். மதுரை, சேலம் சிறைகளில் கடுங்காவல் தண்டனையை அனுபவித்தார். கம்யூனிஸ்ட், மற்றும் தொழிலாளர் விவசாயிகள் இயக்கங்களிலும் போராட்டங்களிலும் பங்கு கொண்ட பலமுறை சிறை சென்றவர். திரு. அ. சீனிவாசன், இராஜபாளையம், தளவாய்புரம், சத்திரப்பட்டி சிவகாசி, சாத்துர், விருதுநகர், அருப்புக்கோட்டை முதலிய நகரங்களில் பல பிரிவு தொழிலாளர்களுக்கும் தொழில் சங்கங்கள் அமைத்து தொழிற்சங்கத் தலைவராக தீவிரமாகப் பணியாற்றியுள்ளார். விவசாயிகள் சங்கங்கள் அமைத்து அவர்களுடைய உரிமைகளுக்காகப் பாடுபட்டுள்ளார். 1966 -ம் ஆண்டில் சென்னைக்கு வந்து, சென்னை ஹார்பர், ஆவடி டாங்க் தொழிற்சாலை, கல்பாக்கம் அணு மி ன்நிலையம் ஆகிய பகுதிகளில் தொழிற்சங்கத் தலைவராக தீவிரமாகப் பணியாற்றி பல போராட்டங்களுக்குத் தலைமை தாங்கி நடத்தியுள்ளார். ஆவடி டாங்க் தொழிற்சாலைப் போராட்டத்தில் போலிஸ் அடக்குமுறைக்கு ஆளாகி, தடியடிபட்டு, பலத்த காயமடைந்து, நிறை சென்று தியாகத் தழும்பு ஏறியவர். திரு.அ. சீனிவாசன் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியில், மாவட்ட, மாநில அளவிலும் தேசிய அளவிலும் பல பொருப்புகளில் பணியாற்றியவர். தமிழ் மாநில துணை செயலாளராகவும், தேசியக்குழு உறுப்பினராகவும் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேல் தொடர்ச்சியாகப் பொருப்புவகித்து, கட்சியின் மாநில அளவிலான அமைப்பு நிலைப்பணிகள், பத்திரிகை பிரசுரப் பணிகள், கட்சியின் அரசியல் கல்வி பயிற்சிப்பணிகளில் ஈடுபட்டு பணியாற்றியவர். திரு. அ. சீனிவாசன், பல்கேரியா, சோவியத் யூனியன், செக்கோஸ்லோவேகியா முதலிய நாடுகளுக்குச் சென்று விரிவாகச் சுற்றுப்பயணம் செய்து அனுபவம் பெற்றவர். திரு. அ. சீனிவாசன் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அதன் வேட்பாளராக திராவிட முன்னேற்றக் கழக அணியில்