பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 பாரதியின் புதிய ஆத்திசூடி-O

மலைமகளையும் கலைமகளையும் திருமகளையும் பற்றி பாடுகிறார். பாரதி சிவனையும், பிரம்மாவையும், திருமாலையும் குறித்துப் பாடுகிறார். பாரதி கண்ணனையும், கணபதியையும், முருகனையும் பற்றிப் பாடுகிறார், பாரதி அனைத்து சமயங்களின் உட்கருத்துக்களையும் போற்றுகிறார். பாரதி கடைசியில் அறிவே தெய்வம் அன்பே தெய்வம் என்றும் தெய்வம் நீ என்று உணர் என்று கூறுகிறார்.

பாரதி எந்தக் கடவுளைப் பற்றிப் பாடினாலும் அதில் மையமாக அவருடைய மனதில் உள்ள வேண்டுதல், நாடும், நாட்டு மக்களும் உலக மக்களும், மக்களின் நல்வாழ்வும் மனிதனின் முழு விடுதலையுமாகும்.

பாரதி, பாரத மாதாவைப் பற்றிப் பாடும் போது பாரத நாட்டின் சிறப்புகளைப் பற்றிக் கூறுகிறார். ஒன்று பரம்பொருள் நாம் அதன் மக்கள் உலகின் பக்கேணி என்றும் இவ்வுலகை இன்பமயமாக்கலே அவருடைய சிந்தனையில் பெரிதும் நின்றது.

பாரதத்தாயைத் தெய்வமாகப் பாடிய பாரதி அக்கவிதைகளில் தேச ஒற்றுமை தேச ஒருமைப்பாடு, அறம், நாடு, ஆட்சி முறை, ஆகிய கருத்துக்களை வெளிப்படுத்துகிறார்.

யாதுமாய் விளங்கும் இயற்கைத் தெய்வமே என்று பிரபஞ்சம் முழுவதையும் ஒன்றாக்கி அந்த இயற்கையின் வடிவமாகப் பாரதி கடவுளைக் கற்பிக்கும் போது அந்த இயற்கையின் பகுதியாக உன்னிடம் 'தெய்வம் நீ என்று உணர்' என்று கூறுகிறார்.

பாரதி தனது சக்திப் பாடல்களில் சிவசக்தியை இயற்கையென்றும், பஞ்சப்பூத சக்தியென்றும், செயற்கையின் சக்தியென்றும், தீ என்றும், அறிவென்றும், ஈசனென்றும் பலவகையாகக் கூறுவதாகக் குறிப்பிட்டுப் பரந்த அவரது கடவுள் கொள்கை மூலம் தெய்வம் நீ என்று உணர்’ என்று குழந்தையிடம் கூறுகிறார்.

மன்னுயிரெல்லாம் கடவுளின் வடிவம், கடவுளின் மக்கள் என்றுணர்தல் என்பது கடவுள் பறறிய பொதுக்கருத்தாகவே பாரதி குழந்தைகளிடம் தெய்வம் நீ என்று கூறுகிறார்.