பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிமுகம் :

பாரதி கவிதைகளின் தனிச்சிறப்புகளில் அவர் இயற்றிய புதிய ஆத்தி சூடியும் ஒன்றாகும். பாரதி பல வகையான பl ல் களைப் பாடியுள்ளார். கவிதைகளை மட்டுமல்லாது கட்டுரைகள் கதைகள் பலவற்றையும் எழுதியுள்ளார். பாரதி பத்திரிகையாளராகப் பணியாற்றி பல பத்திரிகைகள் மற்றும் இதழ்களில் எழுதியுள்ளார். பாரதியின் பாடல்களில் தேசபக்திப் பாடல்கள், ஞானப்பாடல்கள், கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, தனிப்பாடல்கள் என்றெல்லாம் பிற்காலச் சான்றோர்களும், பாரதி. அன்பர்களும் வகை செய்து வெளியிட்டிருக்கிறார்கள், |

பாரதி தனியொரு காவியம் எழுத வேண்டும் என்று கருதி பாஞ்சாலி சபதம் என்னும் சிறந்த புதிய கருத்துக்களைக் கொண்ட ஒரு அற்புதமான காவியத்தை எழுதினார். பாரதியின் பாடல்கள், கவிதைகள், கட்டுரைகள், கதைகள் அனைத்திலும் புதிய கருத்துக்கள் வெளிப்படுவதைக் காணலாம். அவருடைய பக்திப் பாடல்களை எடுத்துக் கொண்டால் கூட அதிலும் நாட்டையும், நாட்டுணர்வையும், நாட்டுயர்வையும், மனிதனையும், மனித உயர்வைப் பற்றியுமே அதிகமாகக் குறிப்பிட்டுப் பாடியுள்ளதையும், எழுதியுள்ளதையும் காண்கிறோம்.

பாரதியின் பாடல்களி ல் பெண் விடுதலை பற்றி எழுதியுள்ளதும் பாப்பா பாட்டுகளும் தனிச்சிறப்பு மிக்கதாகும். அவர் சிந்தித்த விடுதலை என்பது நாட்டின் அரசியல் விடுதலை மட்டுமல்ல.