பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

146 பாரதியின் புதிய ஆத்திசூடி O

79. முனையிலே முகத்து நில்

நாம் எந்த வேலையை எடுத்தாலும் அதில் முனைப்பாக முன்னணியில் நிற்க வேண்டும். நாம் பள்ளிக்குச செல்கிறோம். படிப்பில் அதிக அக்கரையும் முனைப்பும் காட்ட வேண்டும். படிப்பில் முன்னணியில் இருக்க வேண்டும்.

நாம் பல வேறு விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்கிறோம். அதில் அதிகமான அளவில் முனைப்புக் காட்டி முன்னணியில் நின்று போட்டிகளில் வெற்றி பெற வேண்டும்.

நாம் ஒரு தொழில் செய்கிறோம். ஒரு வேலையில் ஈடுபடுகிறோம். நாம் ஈடுபடும் தொழிலிலும், வேலையிலும் அதிகமான அளவில் முனைப்புக் காட்டி முன்னணியில் இருக்க வேண்டும். எந்தத் தொழிலிலும் வேலையிலும் நாம் முதன்மையாகவும் மற்றவர்களுக்கு முன் உதாரணமாகவும் இருக்க வேண்டும்.

நமது நாட்டைக் காக்கவும், நாட்டை பல துறைகளிலும் மேம்பாடு அடையச் செய்யவும் நாம் அதிகமான அளவில் முனைப்புக் காட்டி ஒவ்வொரு துறையிலும் முன்னணியில் இருக்க வேண்டும்.

நாம் சிறந்த மாணவர்களாக, சிறந்த விளையாட்டு வீரர்களாக பல துறைகளிலும் சிறந்த நிபுணர்களாக சிறந்த விஞ்ஞானிகளாகவும் சிறந்த தொழில் முனைவோர்களாக சிறந்த சாகுபடியாளர்களாக சிறந்த தொழிலாளர்களாக உலகிலேயே நமது நாடு சிறந்த நாடாக தோற்றமும் ஏற்றமும் பெற வேண்டும்.

இதையே பாரதி முனையிலே முகத்து நில்’ என்று நமது குழந்தைகளுக்கு எடுத்துக் கூறுகிறார்.

80. மூப்பினுக்கிடங் கொடேல்

மூப்பு என்றால் வயது ஆவதினால் ஏற்படுவது. மற்றொன்று மூப்பு என்றல் தளர்ச்சி என்று சொல்லலாம். குறைந்த வயதிலேயே