பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

0 அ.சீனிவாசன் 147

மூப்பும் தளர்ச்சியும் பல நாடுகளில் ஏற்படுகிறது. வயது அதிகமானலும் உடல் ஆரோக்கியமாக இருந்தால் மூப்பின் தளர்ச்சியைக் குறைக்கலாம்.

இளம் வயதினர், போதுமான உடற்பயிற்சி இல்லாமலும் உடல் நலனில் அதிக கவனம் இல்லாமலும் புகை பிடித்தல், மது அருந்துதல் முதலிய தவறான பழக்க வழக்கங்கள் ஏற்பட்டு அதனால் உடல் நலம் குன்றி தளர்ச்சி ஏற்பட்டு விரைவில் மூப்படையலாம். இத்தகைய விளைவுகளுக்கு நாம் இடமளிக்கக் கூடாது என்று பாரதி கருதினார்.

நாடு அன்னிய ஆட்சியின் கீழ் அடிமைப்பட்டிருந்த காலத்தில் நமது செல்வங்கள் எல்லாம் கொள்ளை போனதாலும், வளர்ச்சி குன்றியதாலும் வறுமையும் ஏழ்மையும் கல்லாமையும் இல்லாமையும் அதிகப்பட்டு மக்கள் நீண்ட ஆயுள் இல்லாமல் தளர்ச்சியும் மூப்பும் அதிகரித்து மரண விகிதம் அதிகமாக இருந்தது.

நாடு விடுதலை அடைந்த பின்னர் பல மாற்றங்களும் ஏற்பட்டிருக்கின்றன. தொழில் விவசாயம், கல்வி, சுகாதாரம், வைத்திய வசதி முதலிய பல துறைகளிலும் வளர்ச்சியும் அபிவிருத்தியும் ஏற்பட்டிருக்கிறது. ஆனபோதிலும் மக்களிடையில் ஏற்றத்தாழ்வு நீடித்துக் கொண்டிருக்கிறது. நாட்டில் குறிப்பாக கிராமப் புறங்களிலும் நகர்ப்புறங்களில் உள்ள குடிசைப் பகுதிகளிலும் ஏழ்மை வறுமை வேலையின்மை எழுத்தறிவின்மை, சுகாதாரக்கேடுகள் சுற்றுச்சூழல் பாதிப்புகள் நீடிக்கின்றன. அதனால் மக்களுடைய வாழ்க்கைத் தரம் பாதிக்கப்பட்டு மக்கள் விரைவில் மூப்படைந்து பல வியாதிகளுக்கும் ஆளாகி தளர்ச்சியடைந்து விடுகிறார்கள். இத்தகைய கேடுகளை நீடிக்க விடக்கூடாது.

நமது நாட்டின் பின்தங்கிய நிலையைப் போக்க வேண்டும்.

தொழில் விவசாயம், கல்வி தொழில் நுட்பம் விஞ்ஞானம், சுகாதாரம், நல்ல உணவு, உடற்பயிற்சி, விளையாட்டு முதலிய