பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 பாரதியின் புதிய ஆத்திசூடி O

பல துறைளிலும் உள்ள பின் தங்கிய நிலையைப் போக்கி வாழ்க்கையை நவீனப்படுத்த வேண்டும். சமூக ஏற்றத்தாழ்வைப் போக்கி நாட்டு மக்களைக் கலாச்சாரத் துறையில் உயர்த்த வேண்டும். இளைஞர்களிடம் தவறான பழக்க வழக்கங்கள் ஏற்படாமல் விழிப்புணர்வு உண்டாக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தை வளர்க்க வேண்டும்.

அதன் மூலம் தான் மூப்பினுக்கு இடம் கொடேல்' என்னும் பாரதி வாக்கை நிறைவேற்ற முடியும்.

81. மெல்லத் தெரிந்து சொல்

எதையும் முழுமையாகத் தெரிந்து கொண்டு தான் ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டும். அரைகுறையாகத் தெரிந்து கொண்டு உளறக்கூடாது. வாய்க்கு வந்தது வச்சித்தள்ளு என்று பேசக்கூடாது எதையும் நிதானித்துப் பேசு, மெதுவாகப் பேசு, நயமாகப் பேசு, இனிமையாகப் பேசு, நன்கு புரிந்து கொண்டு பேசு, மற்றவர்களுக்கும் புரியும் படி பேசு, மற்றவர்கள் மகிழும்படி பேசு, யாரையும் புண்படுத்தாமல் பேசு என்பது பாரதியின் விருபபமாகும்.

உன் படிப்பை உயர்த்திக் கொள்ளவேண்டும். அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். அறிவை விசாலப்படுத்திக் கொள்ள வேண்டும். மற்றவர்களுடன் நட்பையும் அன்பையும் நல்லுறவையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்போது நம்மிடம் மெல்லத் தெரிந்து சொல்லும் பழக்கம் ஏற்படும். 82. மேழி போற்று

மேழி என்பது உழவுக் கருவி. மேழி போற்று என்றால்

விவசாயத்தைப் போற்றி வளர்க்க வேண்டும் என்பதாகும்.

“உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்’ என்பது பாரதி வாக்கு, அத்துடன் உழவுத் தொழில் தொடர்பான பல கருத்துக் களையும் பாரதி குறிப்பிட்டுள்ளார்.

'வஞ்சமற்ற தொழில் புரிந்துண்டு வாழும் மாந்தர் குலதெய்வமாவான்’’