பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

0 அ.சீனிவாசன் 149

என்று கூறுகிறார். சாகுபடித் தொழில் தீமையற்ற வஞ்சமற்ற தொழிலாகும்.

'ஆடுகளும் மாடுகளும் அழகுடைய பரியும் வீடுகளும் நெடுநிலமும் விரைவினிலே தருவாய்'

என்று ஆடு, மாடு நெடு நிலம் தரும்படி வேண்டிகிறார்.

‘'தோட்டத்திலே மரக்கூட்டத்திலே - கனி யிட்டத்திலே பயிரூட்டத்திலே தேட்டத்திலே யடங்காத நிதியின் சிறப்பினிலே உயர்நாடு’

என்று விவசாய வளத்தைப் பற்றி பாரதி குறிப்பிடுகிறார். மேலும்

'இனிய பொழில்கள், நெடிய வயல்கள் எண்னரும் பெரும் நாடு கனியும் கிழங்கும் தானியங்களும் கனக்கின்றித் தரு நாடு’’

என்றுநாட்டின் வளத்தைப் பற்றி பெருமையுடள் பாரதி பேசுகிறார்.

'வயிற்றுக்கு சோறுண்டு கண்டீர் . இங்கு வாழும் மனிதர் எல்லோருக்கும் பயிற்றி உழுதுண்டு வாழ்விர் - பிறர் பங்கைத்திருடுதல் வேண்டாம்'

என்றும்

'உண்ணக்காய்கனி தந்திடுவிரே,

உழுது நன்செய் பயிரிடுவிரே எண்ணெய், பால், நெய், கொணர்ந்திகுவீரே'

என்றும் உழவுத் தொழிலைப் போற்றிப் பாடுகிறார்.

நமது நாடு பெரும்பாலும் விவசாயத்தை சார்ந்துள்ள நாடாக உள்ளது. நாட்டின் பெரும்பாலான மக்கள் விவசாயத் தொழிலை