பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 பாரதியின் புதிய ஆத்திசூடி C

இல்லாவிடில் இக்கலைகள் நசித்துப் போகும். எனவே ரஸத்திலே தேர்ச்சி கொள்ளும்படி பாரதி கூறுகிறார். 90. ராஜசம் பயில்

இயற்கையின் முக்குணங்கள் சாங்கிய தத்துவத்தில் விளக்கப்பட்டு இருக்கின்றன. அந்த முக்குணங்களாவன: சத்வம், ராஜசம் தாமசம் அகியவைகளாகும் இவைகளில் சத்வம் என்பது அறிவு ஒளி, ராஜசம் என்பது ஆற்றல் சக்தி, தாமசம் என்பது தேக்கமும் மயக்கமுமாகும், இந்த முக்குணங்களும் இப்பேதலகில் எல்லா பொருள்களிலும் தென்படுவதைக் காணலாம்.

இந்த முக்குணங்களைப் பற்றி பகவத் கீதையில் விரிவாக விளக்கிக் கூறுப்பட்டிருக்கிறது. பகவத் கீதையை `'. பெயர்த்துள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது.

சத்வம், ரஜஸ், தமஸ் இந்த குணங்கள் பிரசிருதியில் எழுவன, அவற்றுள்ளே சத்வம் நிர்மலத் தன்மையுள்ல் ஒளி கொண்டது. நோவற்றது, இது இன்பச் சேர்க்கையாலும் ஞானச் சேர்க்கையாம் கட்டுப்படுத்துவது.

ரஜோ குணம் விருப்ப இயல்புடையது அவாவின் சேர்க் கையால் பிறப்பது. அது ஆத்மாவைத் தொழில் சேர்க்கையால் கட்டுப்படுத்துகிறது.

தமோகுணம் அஞ்ஞானத்தில் பிறக்கிறது. அது հTհվ հԱՈT உயிர்ப் பொருள்களையும் மயக்கச் செய்கிறது. தவறுதலாலும் சோம்பலாலும் உறக்கத்தாலும் அது ஆத்மாவிைக் கட்டுப்படுத்துகிறது.

இந்த முக்குணங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொ வேளையிலும் மற்ற இரண்டையும் அடக்கி ஒன்று மட்டும்) முன்னுக்கு வருகிறது.

சத்வ குணம் மிஞ்சி நிற்கும் போது எல்லா வாயில்களிலும் ஞான ஒளி பிறக்கிறது. ரஜோகுணம் மிகுதிப்படும் போது அவா,