பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 பாரதியின்-புதிய-ஆத்திசூடி-O

- --- ----------- -

இவ்வாறு கடல், காற்று, நீர்,நெருப்பு, பூமி, இடி, மின்னல், சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், கிரகங்கள் முதலியவற்றின் லீலைக ள் அதிசய செயல் பாடுகள் எண்ணற்றவை வினோதமானவை. அவைகள் நமக்கு பல நன்மைகளைத் தருகின்றன. சில தீமைகளையும் தருகின்றன.

பழங்காலத்தில் இயற்கையின் இந்த லீலைகளைக் கண்டு ஆதி மனிதன் ஆனந்தப்பட்டான். அதிசயப்பட்டான். ஆச்சரியப்பட்டான் அத்துடன் பயந்தான் மிரண்டான், அந்த இயற்கை சக்திகளை எல்லாம் கடவுளின் தன் மைக்கு உயர்த்தினான் சூரிய பகவான் வாயு பகவான் அக்கினி பகவான் பூமி தேவி என்றெல்லாம் கற்பித்துக் கடவுளாக்கி வழிபட்டான்.

பாரதி இந்தப் பேருலகில் இயற்கை மூலம் கிடைக்கும் இன்ப துன்பங்களை எண்ணியெண்ணி எத்தனை கோடி இன்பங்கள் வைத்தாய் இறைவா என்று மகிழ்ச்சி அடைந்து குதுகலித்துப்

பாடினார் . இந்த உலகின் லீலைகள் எண்ணற்றவை. ஆனந்தமானவை. அவைகளை அவைகளின் இயல்புகளையும் செய்லபாடுகளையும், பயன்பாடுகளையும் நன்கு அறிந்து புரிந்து

பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இயற்கையின் செயல்களை அதன் லீலா விநோதங்களைக் கண்டும் பயந்தும் வியந்தும் அனுபவித்த ஆதி மனிதன் படிப்படியாக அதன் நல்ல பலன்களை பயன்பாடுகளை உணரத் தொடங்கினான்.

இன்று மனிதன் பெரிய அளவில் வளர்ச்சி பெற்றுள்ளான். தனது அறிவின் ஆற்றலால் உழைப்பின் திறத்தால் இயற்கை சக்திகளின் மீது தனது செல்வாக்கைச் செலுத்தி அதைப் பல்வேறு வகையில் மாற்றியும் திருத்தியும் எண்ணற்ற வகைகளில் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறான்.

மனித வாழ்க்கை இயற்கையுடன் இந்த உலக லீலைகளுடன்

இணைந்திருக்கிறது. மனிதனே இந்த இயற்கையின் ஒரு பகுதியேயாகும். எனவே மனிதன் இயற்கையின் லீலைகளுடன்