பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

O அ.சீனிவாசன் 187

வேதவானில் விளங்கி அறம் செய்மின் சாதல் நேரினும் சத்தியம் பூணுமின் தீதகற்றுமின்’ என்று திசையெலாம் மோத நித்தம் இடித்து முழங்கியே’’ என்று கண்ணனை வேண்டிய பாரதி பாடுகிறார்.

இவ்வாறு பல பாடல்களில் வேதங்களின் மேன்மைகளைப் பற்றி கூறுகிறார். அதே சமயத்தில் சில போலிச்சுவடிகளும் பொய்மை நூல்களும் புகுந்துள்ளன என்றும் கூறுகிறார். அவைகளை ஒதுக்கிவிட்டு வேதங்களைப் புதுப்பிக்க வேண்டும் என்று கூறுகிறார்.

சூடாமணி நிகண்டில் வேதத்தின் பெயர் ஆதிநூல் என்று எழுதாக் கேள்வியென்று, சுருதி என்று வேதநூல் பொருளின பெயர் ஞானபாகை கரும்பாகை, அருத்தபாகை என்றும் வேத மார்க் கத்தின் பெயர் வைதீகம் என்று பொருள் கூறப்பட்டிருக்கிறது.

வேதம் என்னும் சொல்லுக்கு நேரடியான பொருள் ஞானம் அறிவு என்பதாகும். வேதங்கள் ஒரே நபரால் ஒரே சமயத்தில் மொத்தமாக எழுதப்பட்டது அல்ல, பல பேர் பல காலத்திலும் எழுதிய வாய் வழியில் கூறிய பல பாக்களைத் திரட்டி சேர்க்கப்பட்டதே வேத நூலாகும். இவை சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளாக அவ்வப்போது பல அறிஞர்களால் எழுதப்பட்டவை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இதில் மிகவும் ஆதியாகவுள்ள ஆரம்பப் பாக்கள், கல்வி, அறிவு இல்லாத காலத்தில் கால் நடைகளை ஒட்டிக் கொண்டு மேய்ச்சல் நிலங்களிலும் நதி ஓரங்களிலும் சுற்றித் திரிந்து கொண்டிருந்த மக்களால் வாய் மொழியாகப் பாடப்பட்டு அவை வழி வழியாக வந்து பின்னர் எழுதப்பட்டுத் தொகுக்கப்பட்டதாகும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். அதனால் வேதம் 'ஸ்ருதி' என்று பொருளாகும். அதையே நிகண்டு ஆசிரியர் எழுதாக்கேள்வி என்றும் சுருதி என்று வேதத்தின் பெயரைக் குறிப்பிட்டிருப்பதைக் காண்கிறோம். இந்த சுருதிகளை மந்திரங்கள் என்றும் பின்னால் எழுதப்பட்டவைகளை பிரமாணங்கள் என்றும் இரு பாகங்களாகக் கூறுகிறார்கள்.