பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 பாரதியின் புதிய ஆத்திசூடி O

நான்மறைகளில் ஆதி மறை ரிக் வேதம். இது சுமார் பத்தாயிரத்து ஐநூற்று ஐம்பத்திரண்டு (10552) சுலோகங்களைக் கொண்ட பெரிய நூலாகும். இது இன்றைக்கு நாலாயிரம் ஆண்டுகளுக்கு முந்தியது என்று கூறப்படுகிறது. வேதம் கூறுவது முழு முதல் ஞானம் என்று தெய்வீக ஞானம் என்றும் வேத பண்டிதர்கள் குறிப்பிடுகிறார்கள்.

ரிக் வேதத்தில் உள்ள பல பாடல்களும் சாதாரண மனிதர்களின் அன்றாட விருப்பங்களை ஆசைகளை, அதாவது பசுக்களும் ஆடு, மாடுகளும் வேண்டும் என்றும், உணவு வேண்டும் மழை வேண்டும் மற்றும் பாதுகாப்பு வெற்றி உடல் வலிமை, ஆரோக்கியம், குழந்தை குட்டி வேண்டும் என்றும் வேண்டுதல்களையே குறிப்பிடுபவைகளாக உள்ளன. இந்த வேண்டுதல்கள் எல்லாம் பல தெய்வங்களை நோக்கிக் கேட்பதாகவும் அமைந்துள்ளன. அத்துடன் மனிதனுக்கு அவசியமான மலைகள், மருந்துச் செடிகள், மரங்கள், காடுகள், ஆயுதங்கள் முதலியவைகளைப் பாராட்டிப் பாடுவதாகவும் வழிபடுவதாகவும் அமைந்துள்ளன. நோய்களிலிருந்தும் பல கேடுகளிலிருந்தும் தங்களைக் காப்பாற்றும் தெய்வங்களைப் பற்றியதாகவும் உள்ளன.

பின்னர், வேதக்கருத்துக்களில் இருந்து காலத்திற் கேற்ற வளர்ச்சியும் பல மாற்றங்களும் ஏற்பட்டு உபநிடதங்கள், இதிகாசங்கள், புராணங்கள் மற்றும் பல்வேறு சாத்திரங்களும் அறநூல்களும் பொருள் நூல்களும் தோன்றி மக்களிடம் இடம் பெற்றிருக்கின்றன. அவைகளை வரலாற்றுக் கருவூலங்களாகப் பாதுகாத்து நமது அறிவுச் செல்வத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். --

அதே சமயத்தில் காலத்தால் ஏற்பட்டுள்ள வளர்ச்சியையும் மாற்றங்களையும் கொண்டு புதிய கருத்துக்களும் அறிவுச் செல்வங்களும் தோன்றிப் பெருகியுள்ளன. அன்னிய ஆட்சிக் காலத்தில் மங்கிப் போயிருந்த நமது நாட்டுச் செல்வங்களை எல்லாம் து சி துடைத்து புதுப்பிக்க வேண்டும். புதிய