பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Q அ.சீனிவாசன் 9

அச்சத்தைப் போக்குமாறு நமது முன்னோர்கள் பலரும் ஆன்றோர்களும் சான்றோர்களும் எடுத்துக் கூறி வந்துள்ளார்கள்.

புதிய ஆத்திசூடியின் தொடக்கமாகவே அச்சத்தைத் தவிர்க்கும் படி பாரதி நமக்கு அறிவுறுத்துகிறார். குழந்தை உள்ளங்களிலேயே அக்கருத்தைப் பதிய வைக்க விரும்புகிறார்,

2. ஆண்மை தவறேல்

ஆண்மை என்பது இங்கு வெறும் ஆண்பால் பட்டது மட்டுமல்ல. ஆண்மை என்பது வீரம், தீரம், துணிவு, கம்பீரம் வழிகாட்டும் திறன், அச்சமின்மை முதலிய சிறப்புகள் கொண்டதாகும்.

'ஆரிய நாட்டினர் ஆண்மை யோடியற்றும் சிரிய முயற்றிகள் சிறந்து மிக்கோங்குக” என்று பாரதி குறிப்பிடுகிறார். 'ஆவி தேய்ந்தழிந்திலர் ஆண்மையின் குறைந்திலர் வீரமும் சிரத்தையும் விந்திலரென்று புவியினோர் அறியப் புரிந்தனன் முனிவன்”

என்று கூறுகிறார்.

'ஆண்மை என்னும் பொருளைக் காட்டும் அறிகுறி அவன் பெயர்” என்று பாரதி திலகர் பெருமானைக் குறிப்பிடுகிறார்.

வேளாண்மை, தாளாண்மை, வாளாண்மை, பேராண்மை

மேலாண்மை. நாட்டாண்மை என்றெல்லாம் ஆண்மையின் சிறப்பும் கூர்மையும் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.

'அல்லல் ஒழியும் - நல்ல ஆண்மை உண்டாகும்’