பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 == பாரதியின் புதிய ஆத்திசூடி O

என்று பாரதி மனிதர்களின் மேன்மைகளில் ஒன்றாக ஆண்மையைப் பற்றி குறிப்பிடுகிறார்.

பக்தி, சித்தத் தெளிவு, வித்தை, வீரம், செம்மை, சஞ்சலநீக்கம், ஆசை, அச்சம், பாசம் ஆகியவற்றை அறுத்தல், மோசம் செய்யாமை சோர்வு இல்லாமை, கல்வி, வீரியம் ஓங்கல் அறிவுத் தெளிவு, வல்லமை, சோம்பல் இன்மை, நிமிர்ந்த நிலை, வலிமை முதலிய மனித மேன்மைகளில் ஆண்மையும் ஒன்றாகும் என்று பாரதி ஒரு பாடலில் குறிப்பிடுவதைக் காணலாம்.

3. இளைத்தல் இகழ்ச்சி

நமது குழந்தைகள், இளம் ஆண்களும் பெண்களும் இளைத்துபோய் எலும்பும் தோலுமாய் நோஞ்சானாய் இருக்கக் கூடாது. உடல் இளைத்துப் போயிருந்தால் உடல் பலவீனமாக இருந்தால் எந்த நோயும் சுலபமாக தொத்திக் கொள்ளும், குழந்தைகள் இளைத்திருந்தால் எல்லோரும் கேலி பேசுவார்கள். அது இகழ்ச்சியாகும். 。锣 3. எனவே இளைத்தல் கூடாது கிடைக்கும் து: ഭൂബ് வரை நன்றாக சாப்பிட வேண்டும். ( சத்துள்ள உணவைத் தேர்ந்து எடுத்து சாப்பிட வேண்டும். உடற்பயற்சி செய்ய வேண்டும். உடலை வலுவாக வைத்துக் - -- கொள்ள வேண்டும். அப்போதுதான் ( . – £T. உள்ள மும் அறிவும் வலுவாகவும் Nளு. தெளிவாகவும் அமையும்.

இங்கு பாரதி குறிப்பிடுவதில் இளைத்தல்

என்பது ஒரு குழந்தை, ஒரு சிறுவன், சிறுமி ஒரு தனி மனிதன் இளைத்திருப்பது மட்டுமல்ல. ஒரு நாடு, ஒரு சமுதாயம், ஒரு குடும்பம் இளைத்திருப்பதும் சேரும். இளைத்தல் என்பது இங்கு நலிவாகும். ஏழ்மையும் வறுமையும் நிறைந்து செல்வமும் அறிவும் குன்றி நலிவடைவதாகும். ஒரு நலிவுற்ற நாடும், ஒரு நலிவுற்ற சமுதாயமும், ஒரு நலிவுற்ற குடும்பமும், ஒரு நலிவுற்ற தனி நபரும் பெருமைக்குரியதல்ல, இகழ்ச்சிக்குரியதாகும்.