பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 பாரதியின்-புதிய-ஆத்திசூடி-9

எண்ணங்களை, சிந்தனைகளை, கருத்துக்களை, அனுபவ அறிவினை மற்றவர்களுக்கு எடுத்துரைக்கிறான், கலந்து ரையாடுகிறான். அத்தகைய கலந்துரையாடல்கள் மற்றும் ஆய்வுகள் மூலம் புதிய கருத்துக்கள் தோன்றி அவை நிலைபெறுகின்றன. மனிதன் தனது சொந்த அறிவுச் செல்வத்தை வாய்மொழியாக தனது பரம்பரைக்குச் சொல்லி வைத்துப் போகிறான், எழுத்து மூலம் எழுதி அவை நூல்களாக வெளிவந்து நிலை பெறுகின்றன. சங்ககால மனிதனின் சிந்தனைகளை அறிவுச் செல்வங்களை இன்று நாம் படித்து அறிந்து கொள்ள முடிகிறது. இவ்வாறு உலகெல்லாம் உள்ள அறிஞர்கள் பல ஆயிரம் ஆண்டுகளாக சேகரித்து வைத்துள்ள அறிவுச் செல்வங்கள் தலைமுறை தலைமுறையாக மனிதனுக்குக் கிடைக்கிறது. அவைகளைக் கல்வி மூலம் பல நூல்களைப் படிப்பதன் மூலம் மனிதனால் பெற முடிகிறது.

இவ்வாறு மனிதனின், மனித குலத்தின் அறிவு விரிவடைகிறது. அறிவு விரிவடையக் கல்வியும் படிப்பும் முக்கிய சாதனமாகும். கல்வியையும் படிப்பையும் வலியுறுத்தி பல தலைவர்களும் அறிஞர்களும் பெரியோர்களும் அறிவுரை கூறியுள்ளார்கள். கல்வி என்பது மனித சமுதாயத்தின் வாழ்க்கை முறையின் பகுதியாக அமைந்துள்ளது.

ஒருவருடைய இயற்கை அறிவை வளர்ப்பதற்கு அவனுடைய கல்வி அறிவு துணை செய்கிறது. எனவே எல்லா வகையிலும் அறிவை வளர்க்க வேண்டும். சிந்தனையை விசாலபபடுத்த வேண்டும். எண்ணுவதை உயர்த்த வேண்டும். நல்லனவற்றை உயர்வானவற்றைப் பற்றியே எண்ண வேண்டு. சிந்திக்க வேண்டும் என்பதற்காக எண்ணுவதை உயர்வு என்று பாரதி எடுத்துக்காட்டுகிறார்.

8. ஏறு போல் நட

மனிதன் ஆணானாலும், பெண்ணானாலும் நிமிர்ந்து நடக்க வேண்டும். மிடுக்குடன் நடக்க வேண்டும். நேராக நடக்க வேண்டும். நேர்மையாக நடக்க வேண்டும். ஏறு நிமிர்ந்து