பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 பாரதியின்-புதிய-ஆத்திசூடி-9

என்று ஒற்றுமையை உறுதிப்படுத்தி அது ஒன்றே வழி என்று பாரதி வலுவாக எடுத்துக் கூறுகிறார்.

இவ்வாறு பல்வேறு துறைகளில் நாட்டு மக்களின், ஒற்றுமையை வலியுறுத்தி பாரதி ஒற்றுமையே வலிமையாம் என்று புதிய ஆத்திசூடியிலும் எடுத்துக் காட்டுகிறார்.

11. ஒய்தலொழி

ஒய்தல் இல்லை, ஒரு வேலையை எடுத்தால் அதைக் கண்ணும் கருத்துமாக இருந்து நிறைவேற்றி முடிக்க வேண்டும் அதுவே பாரதி வழி.

'அறிவிலே தெளிவு, நெஞ்சிலே உறுதி அகத்திலே அன்பின் வெள்ளம் பொறிகளின் மீது தனியரசானை பொழுதெலாம் நினது பேரருளின் நெறியிலே நாட்டம், கருமயோகத்தில் நிலைத்திடல் என்றவை அருளால்”

என்று ப்ாரதி கூறும் கருமயோக மே ஒய்தலொழி' என்பதாகும். ஒய்தலை ஒழித்து இடைவிடாமல் வேலை செய். இடைவிடாது தொழில் செய் என்பதே பாரதியின் வழியாகும்.

நமக் குத் தொழில் கவிதை. நாட்டுக் குழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல் என்பது பாரதியின் வாக்கு. சோர்வு இல்லை, ஒய்தல் இல்லை என்று பல பாடல்களிலும் பாரதி வலியுறுத்திக் கூறுகிறார்.

பாரதி காலம் நாடு அடிமைப்பட்டிருந்த காலம். எனவே நாடு விடுதலை அடையும் வரை ஒயுதல் இல்லை என்று பாரதி கூறினார். நாடு விடுதலை பெற்ற பின்னர், நாடு சகல துறைகளிலும் முன்னேற்றம், வளர்ச்சி மேம்பாடு காண வேண்டும். அதற்காக இடைவிடாது ஒயுதல் இன்றி நாம் பணியாற்ற வேண்டும்.

பள்ளிப் பருவததில் நாம் இடைவிடாமல் படிக்க வேண்டும். அறிவைப் பெற வேண்டும் உடலைப் பேண வேண்டும். அதற்காக ஒயுதல் இன்றி நாம் பாடுபட வேண்டும்.