பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

O_அ.சீனிவாசன் 31

நோய்கள் வருகின்றன. உபாதைகள் ஏற்படுகின்றன என்று நமது நாட்டு வைத்தியமுறை கூறுகிறது. அதற்கு மாற்றாக உடல் அமைப்பைச் சமப்படுத்திச் சீராக்க மருந்துகள் கொடுப்படுகின்றன. மருந்துகள் நமது நாட்டு தட்பவெப்பநிலை, நமது உடலமைப்புகள் ஆகியவைகளுக்கேற்ப, இயற்கையோடும் நமது உணவு முறைகளுடனும் இணைந்து மருந்துகள் நோய்களுக்கேற்ற வகையில் கொடுப்பது நல்ல.

நோய்களைக் கண்டறிவதற்கு அந்தந்த நோய்க்கான காரணங்களையும் மூலக்கூறுகளையும் ஆராய்ந்து அந்த நோயைக் களைவதற்கு மருந்து கொடுக்கப்பட வேண்டும்.

"நோய்நாடி நோய் முதல் நாமு, அது தணிக்கும்

வாய்நாடி வாய்ப்ப செயல்”

என்பது வள்ளுவர் வாக்காகும். நோய் இன்னது என்று அறிந்து அந்த நோய்க்கான மூல காரணத்தை அறிந்து அந்த நோயைத் தணிப்பதற்கான வழியை அறிந்து அதற்கேற்றபடி அந்த நோயைத் தீர்க்க வழிகாண வேண்டும் என்பது அதன் கருத்தாகும்.

நவீன மருத்துவ முறைகளில் பல சிறந்த ஆய்வுகள் மூலம் ஆய்வுக்கூடங்கள் மூலம், கருவிகள், உபகரணங்கள் மூலமும் நோய்களும், நோய் மூலங்களும் கண்டுபிடிக்கப்பட்டு அதற்கான மருந்துகளும் கொடுக்கப்படுகின்றன.

வந்த நோய்களை நிறுத்துவதற்கு, தீர்ப்பதற்கு மருந்துகள் கொடுப்பதும் அத்துடன் நோய்கள் வராமல் தடுப்பதும் அவசியமாகும். அதுவே மேலான வழியுமாகும். உடலையும், விட்டையும், ஊரையும், தெருவையும் நாட்டையைம் சுத்தமாக வைத்துக் கொள்ளவும் உண்ணும் உணவும், பருகும் நீரும், காற்றும் சுத்தமாக இருக்கவும் நாம் இடைவிடாமல் முயற்சிக்க வேண்டும். பாரதியின் ஒளடதம் குறை என்பது அவ்வாறான நோய்களைத் தடுக்கும் முறைகளை ஊக்குவிப்பதாகும். இயற்கையோடு