பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 பாரதியின் புதிய ஆத்திசூடி 0

இணைந்து நமது வாழ்க்கை முறைகளைச் சீராக்கினால், சமப்படுத்தினால் நோய்கள் குறையும் மருந்தின் தேவைகள் குறையும்.

உடல் ஆரோக்கியத்தைப் பெருக்கி, நோய்களை வருமுன் தடுத்து, நோய்களைத் தாங்கி முறிக்கும் சக்தியை உடலில் வளர்த்து உடலைப் பாதுகாப்பது அவசியம். அதற்கு ஒளடதம் குறை என்பது நல்ல மருந்தும் மந்திரமுமாகும்.

13. கற்றதொழுகு

நன்றாகக் கற்க வேண்டும். கற்றபின் கற்றபடி நடக்க வேண்டும். அதுவே கற்றதொழுகு என்பதன் பொருள்.

'கற்க கசடற கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக.” என்பது வள்ளுவர் வாக்கு.

நன்றாகக் கற்க வேண்டும். கற்க வேண்டியவைகளை எல்லாம் நன்றாகக் கற்க வேண்டும். குறை நீங்கிக் கற்க வேண்டும். கற்க வேண்டியவைகளை எல்லாம் குறைவறக்கற்ற பின் அந்தக் கல்விக் கேற்றபடி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறள் வழி.

ஆயினும் கல்வி கற்பதற்கு காலமும் காலவரம்பும் இல்லை. கல்வி என்பது பெருங்கடல். அறிவு என்பது அனந்த வடிவானது. எனவே கல்வி கற்பது இடைவிடாத செயல்பாடும் இருப்பினும் குறிப்பிட்ட பருவத்தில் அடிப்படைக் கல்வியை முற்றாகப் படிக்க வேண்டும். மனித வாழ்க்கையை நான்கு பருவங்களாக நமது நாட்டு அறிஞர்கள் பிரித்திருக்கிறார்கள். அவை மாணவப்பருவம் (பிரம்மச்சர்யம்), இல்லறம்(கிரஹஸ்தம்), வானப்பிரஸ்தம் (ஒய்வு நிலை), துறவு நிலை (சந்நியாசம்), இதில் முதல் பருவமான' மாணவப் பருவத்தில் (பிரம்மச்சர்யம்) அடிப்படைக் கல்வியைக் கற்க வேண்டும். கற்று முடிக்க வேண்டும். வாழ்க்கைக்குத் தேவையான அத்தனை கல்வியையும் அந்தப் பருவத்தில் கற்று முடிக்க வேண்டும். கல்வியின் சிறப்பை கல்வியின் அவசியத்தை பாரதி பல முறை தனது நூல்களில் அழுத்தமாகக் குறிப்பிடுகிறார்.