பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 பாரதியின்-புதிய-ஆத்திசூடி_0

செய்பவர்களாவும் பரஸ்பரம் மதிப்புக் கொடுப்பவர்களாகவும் விட்டுக் கொடுப்பவர்களாகவும் ஆருயிர் துணைவர்களாகவும் விளங்க வேண்டும். ஒருவர் பொறை இருவர் நட்பு, என்பதும் ஒரு இலக்கணமாகும்.

இராமாயணத்தில் இராமன் - குகனுடனும், சுக்ரீவனுடனும் வீடணனுடனும் கொண்ட நட்பு உலகில் அறத்தை நிலைநாட்ட உதவியது. மகாபாரத்தில் துரியோதனன் கர்ணன் நட்பு நட்புக்கு இலக்கணமானதாகும்.

கார்ல் மார்க்ஸ் - பிரடரிக் ஏங்கல்ஸ் ஆகிய இருவரின் நட்பும் மனிதாபிமானமும் பொதுவுடமை தத்துவமும் உருவாவதற்கு உதவியது. இவ்வாறு இலக்கியங்களிலும் வாழ்க்கையிலும் சிறந்த நட்பிற்கு பல உதாரணங்களைக் காணலாம்.

சமுதாய வளர்ச்சிக்கு மனித நேயம் மிக அவசியமானதாகும். வெறுப்பு பகைமை பொறாமை ஆகியவைகளுக்குப் பதிலாக அன்பு, நட்பு, நேசம், கருணை மனிதனுக்கு மனிதன் மரியாதை கொடுத்த திறமைகளை அங்கீகரித்தல் ஆகியவை வளர்க்கப்பட வேண்டும்.

பாரதி தனது கவிதைகளில் பாடல்களில் உயர்ந்த பட்ச மனிதாபிமானப் பண்பை வெளிப்படுத்தியுள்ளார்.

அன்பே சிவம், உலகத் துயர் யாவும் அன்பினில் போகும் என்று புத்தன் கூறிய மொழியை பாரதி எடுத்துக் காட்டுகிறார்.

புவி மிசை தருமமே அரசியல தனிலும் பிற இயல் அனைத்திலும் வெற்றி தரும் என்று வேதம் கூறுவதாக பாரதி . எடுத்துக் காட்டுகிறார். உலகில் அறவழியே அரசியலிலும் இதர துறைகள் அனைத்திலும்வெற்றிதரும் என்று பாரதி கூறுவது இன்று மிகவும் நல்ல பொருத்தமுடையதாகும். திறமை கொண்ட தீமையற்ற தொழில் புரிந்து யாவரும் தேர்ந்த கல்விஞானம் எய்தி இந்த நாட்டில் வாழ்வோம் என்று பாரதி விடுதலைப்பாட்டில் 'குறிப்பிடுவது உயர்ந்த மனித நேயத்தை வெளிப்படுத்துகிறது.