பக்கம்:பாரதியின் புதிய ஆத்திச்சூடி ஒரு விளக்கவுரை.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 பாரதியின் புதிய-ஆத்திசூடி-9

பூமியில் தூங்கிக் கொண்டிருக்க மாட்டோம். தன்னலம் கருதி இழிவான தொழில்களைச் செய்யமாட்டோம் தாய்த்திரு நாடு என்றால் இனி கையை விரிக்க மாட்டோம் என்று கூறுகிறார்.

சுடுதலும் குளிரும் உயிருக்கு இல்லை. சோர்வும் வீழ்ச் சியும் தொண்டருக்கில்லை என்னும் தன்மை இருக்க வேண்டும்.

தன்மையிழவேல் என்று கூறும் பாரதி, அஞ்சி அஞ்சிச் சாகாதே, சிப்பாயைக் கண்டு அஞ்சாதே, சேவகளைக் கண்டு மனம் பதைக்காதே, எப்போதும் கை கட்டி நிற்காதே, யாரிடத்திலும் பூனைகள் போல் ஏங்கி நடக்காதே, சூது செய்யும் நீசர்களுக்குப் பணிந்திடாதே, பாமரராய் விலங்குகளாய் உலகம் அனைத்தும் இகழ்ச்சி சொல்லும் நிலைமையில் இருக்காதே ஊமையராய் செவிடர்களாய், குருடர்களாய் இருக்காதீர் என்று பாரதி கூறுகிறார்.

உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாக வேண்டும். எங்கும் சுதந்திரம் எல்லோரும் சமம், எல்லோரும் ஒன்று, நல்லோரே பெரியோர் உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம், யாருக்கும் அடிமையில்லை என்னும் தன்மைகளை நாம் இழந்துவிடக் கூடாது.

தொண்டு செய்யும் அடிமையாக இருக்காதே. சாதிச்சண்டை போடாதே. சமயச் சண்டை போடாதே. அச்சத்தை நீக்கு. ஆண்மையைத் தாங்கு. கப்பல் விமானம் ஏறக் கற்று கொள், கடலைத் தாண்டக் கற்றுக் கொள். ஒற்றுமை பயில், வேற்றுமை பேசாதே, சேர்ந்து வாழக் கற்றுக் கொள் சோர்ந்து விழாதே சோம்பலைத் துடைத்தெறி, சிறுமைக் குணங்களைப் போக்கு, நாட்டைக் காக்க சேனைகளை நடத்து என்றெல்லாம் பாரதி நமக்கு எப்படி மனிதத்தன்மை இழக்காமல் நாம் வாழ வேண்டும் என்பதைக் கூறியுள்ளார்.

ஊக்கமும், உள்வலியும் உண்மையில் பற்றும் கொண்டிருக்க வேண்டும், மனதில் சலனம் இல்லாமல் மதியில் இருளே தோன்றாமல் இருக்க வேண்டும். நம்முடைய கடமை என்பது