பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 பாரதியும் பாரதிதாசனும் ஆள் இரண்டும்; சிவப்பு மாதுளை சிதறச் சிந்தும் ஒள்ளிய மணிச் சிரிப்பும் உவப்பூட்டும் பெண் குழந்தை "தமிழரின் தமிழ்க் குழந்தை தமிழ்ப் பெயர் பெறுதல் வேண்டும்' என்று அக்குழந்தைக்கு 'அமிழ்தம்மை’ எனப் பெயரிட்டனர். குழந்தையைப் பார்க்க வந்தவர்களுக்கு வெற்றிலைப் பாக்குத் தந்து, தமிழ் பாட இசை நடத்தி வழியனுப்பி வைக்கிறார்கள். குழந்தை தாய்ப்பால் உண்டு வளர்கிறது. தங்கத்துப் பாட்டியும், மலர்க்குழலிப் பாட்டியும் தாலாட்டுப் பாடிக் குழந்தையை உறங்க வைக்கின்றனர். உருகிய நெய்யும் பருப்பும் இட்ட சோற்றுடன் மிளகுநீர் துளியளவு ஊற்றிச் சிறியவள்ளத்தில் சேர்த்தெடுத்துக் குழந்தைக்குக் காக்கை காட்டிச் சோறுாட்டுகிறாள் நகைமுத்து; ஒடுவது தெரியாது ஒடுகின்ற நாள்போல் வளர்வது தெரியாமல் அமிழ்தம்மை வளர்ந்துவந்தாள். குடும்ப விளக்கின் ஐந்தாவிதான இறுதிப்பகுதி முதியோர் காதல் என்பதாகும். புரட்சிக் கவிஞர் என்னும் முத்திரைக்கு அச்சாரம் காட்டி நிற்பதுபோல இப்பகுதி அமைந்துள்ளது. அண்ணாந்து ஏந்திய இளமுலை தளரினும் கன்னெடுங் கூந்தல் கரையொடு முடிப்பினும் நீத்தல் ஓம்புமதி பூக்கேழ் ஊர என்ற நற்றிணைப் பாடல் நவில்வது, தலைமகளுக்குத் தலையணி யோம்புக என்னும் தோழியின் கூற்றாகஇரக்கற் குறிப்புடன் வேண்டும் கூற்றாக அமைவதாகும்.