பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Н1. t unr. 207 ஆனால் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனாரி ஓர் அரிய மனநிலை-காதல் என்பது உடற்கலப்பில் இல்லை, உளக் கலப்பில் உயிர்க் கலப்பில் உளது என எண்ணும் தலைவன் கூற்றில் அமைந்திருக்கக் காணலாம். தங்கம் முதுமை புற்றாள். ஆயினும் தங்கம் மணவாளனாம் மணவழகன் உள்ளத்தில் தங்கத்தின் மேற்கொண்ட காதல் கடுகளவும் குறையவில்லை. முதியோளே வாழுகின்றாள் என் நெஞ் வில் மூன்று போதும் என்று மணவழகன் எண்ணுகின்றான். "தங்கத்தின் உடம்பு புதுமலர் அல்லவாம்; காய்ந்த பும்கட்டு போலும் உடம்பாம். சதிராடும் நடை போய் தள்ளாடும் நடை வந்துவிட்டதாம். முகம் சந்திரனாக இல்லையாம்; வறண்டு போன நிலம்போல வாட்ட முற்றிருக்கிறதாம்; கண்கள் குழி விழுந்துள்ளனவாம். ஆயினும் அவள் உயிரோடு இன்றும் உயிர்த்து வாழ் கின்றாள் என்கின்ற ஒன்றே மணவழகனுக்கு மட்டில்லா இன்பம் வழங்குகின்றதாம்.” எவரும் நினைவிலே இருத்திக்கொள்ள வேண்டிய எளிய ஆனால் உயரிய கருத்தமைந்த பாடலைக் காணுங்கள்; புதுமலர் அல்ல; காய்ந்த புற்கட்டே அவள்உ டம்பு! சதிராடும் நடையாள் அல்லள்; தள்ளாடி விழும்மூ தாட்டி! மதியல்ல முகம்.அ வட்கு வறள் நிலம்! குழிகள் கண்கள்! எதுஎனக் கின்பம் கல்கும்? "இருக்கின்றாள்" என்ப தொன்றே. மணவழகனார் மனம் போன்றே தங்கத் தலைவி தங்கத்தின் உள்ளமும் அமைந்துள்ளது.