பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

109. 'அன்பே இன்பம் தரும். பகைமை அழிக்கும் என்று தெரிந்தோமோ? நல்லது, எழுங்கள், கோடிக்கணக்கான மானிடர் எங்கும், எப்போதும், எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செலுத்தத் தொடங்குவோம். கலியை அழிப்போம். சத்யத்தை நாட்டுவோம். 28. அமிர்தம் தேடுதல் 'காக்க கின்னருட் காட்சியல்லாதொரு போக்குமில்ல' -தாயுமானவர். பல வருஷங்களின் முன்னே தெரு வழியாக ஒரு பிச்சைக்காரன் பாடிக்கொண்டு வந்தான். 'தூங்கையிலே வாங்குகிற மூச்சு-அது சுழிமாறிப் போனலும் போச்சு' இந்தப் பாட்டைக் கேட்டவுடனே எனக்கு நீண்ட யோசனை உண்டாகி விட்டது. என்னடா இது இந்த உடல் இத்தனை சந்தேகமாக இருக்கும்போது இவ்வுகத்தில் நான் என்ன பெருஞ் செய்கை தொடங்கி நிறைவேற்ற முடியும்? ஈசன் நம்மிடத்தில் அறிவை விளங்கச் செய் கிருன். அறிவே தமது வடிவமாக அமைத்திருக்கிருன். அறிவு, இன்பத்தை விரும்புகிறது. அளவில்லாத அழகும் இன்பமும் கொண்ட உலகமொன்று நம்மோடு இருக்கிறது. எப்போதும் இவ்வுலகம் இன்பம். இந்த உலகம் கவலையற்ற தாகும்; இதிலே அணுவிலும் அணுவொக்கும் சிறிய பூமண்டலத்தின் மீதுதான் நம்மால் சஞ்சரிக்க முடிகிறது. இது போல் கணக்கில்லாத மண்டலங்கள் வான்வெளியிலே சுழல்கின்றன. அவற்றின் இயல்பையும் நாம் அறிவினலே காண்கிருேம். அவற்றிலே ஒரு பகுதியின் வடிவங்களைக்