பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 மென்றநிச்சயத்தோடிருக்கிருர். அந்தந்த தேசத்தாரிஷ்டப் படி அந்தந்த ராஜ்யம் ஆளப்பட வேண்டுமென்று நேசக் ககதியார்.வாயால் ஒயாது சொல்லுகிருர்களேயன்றிக் கார் யத்தில் வரும்போது, உலகத்து ராஜ்யங்களில் பலஹீனத் தோடிருப்பவனவற்றையெல்லாம், இவர்களுடைய ஸெள கர்யங்களுக்கிசைந்தபடி இந்நேசக் ககதியார்களின் அபிப் பிராயங்களுக்கு, பலாத்காரமாகவேனும் உட்படுத்த முயற்சி செய்கிருர்கள். கிரேக்க தேசத்து ஜனங்கள் தங்களிஷ்டப்படி ராஜா ஏற்படுத்திக் கொள்வதைக்கூடத் தடுத்துப் பேசத் தங்களுக்கதிகாரமுண்டென்று நேசக் ககதியார் நினைக்கிருர்கள். இதிணின்றும் கிரேக்கர் நேசக் ககதியின் கூட்டத்தை விட்டுப் பிரிந்து செல்லவும் விரும்பக் கூடுமென்று கருதுகிறேன். -விநோதத்திரட்டு என்ற கட்டுரைப்பகுதி-பாரதி தமிழ் 42. விதி 9 செப்டம்பர் 1916. விதி மூன்று வகைப்படும் : 1. தெய்வ விதி 2. சாஸ்திர விதி 3. நாட்டு விதி தெய்வ விதி இந்த மூன்றிலே தெய்வ விதியை மாற்ற முடியாது. காற்றிலே வீசிய கல் இடையிலே தடுக்கா விட்டால் மண் மேலே வந்துவிழும்; தி சுடும்; பணி குளிரும். மின்னல் அழிக்கும். வெயில் ஒளி செய்யும். இவற்றைப் பிற விதி களால் சிறிது நேரம் தடுத்தாலும் தடுக்கலாம். இயற்கை விதிகளை மாற்றிவிட வழியில்லை. நன்மை நினைத்தால் நன்மை விளையும். தீமை நினைத்தால் தீமை விளையும். பொய் இழிவு தரும். உண்மை கைதுக்கும். இவை