பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியார் உரைகடை 17. உயிரின் ஒலி 26 டிசம்பர் 1917. சில தினங்களுக்கு முன்பு கல்கத்தாவில் பூரீ ஜகதீச சந்திரவஸ்", தமது 'வஸ்' மந்திரம்' என்ற கூடத்தைப் பாரத மாதாவுக்குச் சமர்ப்பணம் செய்கையில் உயிரின் ஒலி' என்ற மகுடமிட்டு ஒரு பிரசங்கம் செய்தார். அவருடைய கொள்கை எப்படியென்ருல் :- நாம் ஜடபதார்த்தமாக நினைக்கும் உலோகாதிகளில் உயிர் நிறைந்திருக்கிறது; ஜந்துக்களைப்போலவே விருகrாதிகளுக் கும் உணர்ச்சியிருக்கிறது. ஆகவே மண், செடி, ஜந்து மனுஷ்யன் அத்தனைக்குள்ளும் ஒரே விதமான ப்ராண சக்தியிருக்கிறது. இந்த உலகமே உயிர்க்கடல் என்பது அவரது சித்தாந்தம். அவர் பல நுட்பமான கருவிகள் செய் திருக்கிரு.ர். ஹிந்து தேசத்துத் தொழிலாளிகளைக்கொண்டு அந்த ஸஅஷ்மக் கருவிகளை எல்லாம் செய்து கொண்டார். அந்தக் கருவிகளின் நேர்த்தியைப் பார்த்து ஐரோப்பிய சாஸ்திரிகளும் யந்திரிகளும் ஆச்சரியப்படுகிருர்கள். அந்தக் கருவியின் உதவியால், ஒரு பூண்டின் கையில் ஒரு ஊசி எழுதுகோல் கொடுக்கிரு.ர். ஒரு புகைபட்ட கண்ணுடியின் மேல் அந்த ஊசி எழுதுகிறது; அதாவது, கோடுகள் கீறு கிறது. அந்தக் கோடுகளினல் மேற்படி செடியின் உள்ள நிலையை, அதன் நாடியின் அசைவு தெரிவிக்கிறது. செடிக்கு விஷத்தைக் கொடுத்தால் மூர்ச்சை போடு கிறது. மறுபடி, தெளிய மருந்து கொடுத்தால் தெளிகிறது,