பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 எல்லா உயிர்களும் மரணத்துக்கு அஞ்சுகின்றன. ஆனல், வறுமை மரணத்திலும் பெரிய துன்பமென் நுணர்ந்த ஏழைகள் மாத்திரமே 'தெய்வமே எனக்கொரு சாவு வராதா?’ என்று சில சமயங்களில் வேண்டுவது காண்கிருேம். இந்த ஏழ்மை இத்தனை கொடிதாக ஏற்பட்ட காரணந்தான் யாதெனில் சொல்லுகிறேன். உணவு தான் pவ ஜந்துக்களின் அவசரங்களனைத்திலும் பெரிய அவசரமானது. 'மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை தானம் தவம் முயற்சி தாளாண்மை-தேனின் கசிவந்த சொல்லியர்மேற் காமுறுதல் பத்தும் பசி வந்திடப் பறந்துபோம்" எனவே, இவ்வுலக இன்பங்கள், பெருமைகள் எல்லா வற்றிற்கும் அஸ்திவார பலம் உணவு. உணவு இல்லாத இடத்தில் அவை நிற்க வழியில்லை. மேலும், வெறுமே உயிர் தரித்திருப்பதற்குக் கூட ஆஹாரம் அவசியமாயிருக் கிறது. சோறில்லாவிட்டால் உயிரில்லை. இது கொண்டே, பெரும் பான்மையோருக்கு அன்ருடம் உணவு கிடைக்கு மென்ற உறுதியில்லாமலும், பலருக்கு உணவே கிடையா தென்பது உறுதியாகவும் ஏற்படுத்திவைக்கும் வறுமை யையே இத்தனை பெரிய கொடும் பகையாகக் கருதி மனிதர்கள் அஞ்சுகின்றனர். இந்த விஷயத்தில் மனித ஜாதியாரின் நிலைமை மற்ற மிருகங்கள் பகதிகள் நிலைமையைக் காட்டிலும் அதிக பரிதாபகரமாகவும் இழிவாகவும் ஏற்பட்டிருக்கிறது. திருஷ்டாந்தமாக, பன்றி ஜாதி அல்லது நாய் ஜாதியை எடுத்துக்கொள்ளுங்கள். பல ஹீனமான நாயொன்று ஏதேனும் ஆஹாரம் தின்று கொண்டிருக்கும்போது