பக்கம்:பாரதியும் உலகமும்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25. செல்வம் - II 'பணமில்லாதவன் பிணம்' என்று பழமொழி சொல் கிறது. இதன் கருத்தைத்தான் திருவள்ளுவர் வேருெரு வகையிலே பொருளில்லார்க்கிவ்வுலகமில்லை என்று சொல்லியிருக்கிரு.ர். இந்த உலகிலுள்ள எல்லாத் துன்பங்களைக் காட்டிலும் வறுமைத் துன்பம் கொடியது. இவ்வுலகத்தில் எல்லாச் சிறுமைகளைக் காட்டிலும் ஏழ்மையே அதிகச் சிறுமை யாவது. "இன்மையின் இன்னததில்' என்றும், 'இல்லானே இல்லாளும் வேண்டாள்; மற்றீன் றெடுத்த தாய் வேண் டாள்; செல்லாதவன் வாயிற் சொல்' என்றும் முன்னேர் சொல்லியிருக்கிருர்கள். இங்ங்னமே, ஏழ்மையின் நிகரற்ற இகழ்ச்சியையும், துன்பத்தையும் விளக்குவனவாய்த் தமிழ்ப் பண்டை நூல் களிலும், காவியங்கள் முதலியனவற்றிலும் காணப்படும் வசனங்களையும் உதாரணங்களையும் எடுத்துக்காட்ட முயன்ருல், அத்தொகுதி ஆயிரம் சுவடிகளுக்கு மேலாய் விடும். இவ்விஷயமாக இதர பாஷைகளிலுள்ள நூல் களிலும் இவ்வாறே செறிந்து கிடக்கும் வாக்கியங்களும் திருஷ்டாந்தங்களும் கணக்கில்லாதனவாம். எல்லா தேசங்களிலும் எல்லா பாஷைகளிலும் அறிஞ ரெல்லாம் ஒருங்கே வறுமைதான் எல்லா நரகங்களைக் காட்டிலும் மிகக் கொடிது என்பதை அங்கீகாரம் செய் திருக்கிருர்கள். ஆதலால், இந்த விஷயத்துக்கு நாம் மேற் கோளாதாரங்களை அதிகமாகக் காட்டவேண்டிய அவசிய மில்லே. ஏனென்ருல் வறுமை மிகமிகப் பெரிய இகழ்ச்சி யும் துன்பமுமாகும் என்பது கற்ருேர்க்கு மட்டுமே யல்லாது கல்லாதார்க்கும் நன்கு தெரிந்த விஷயமேயாம்.