பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 அழுக்குத் தலையணை; ஒட்டைத் தலையணை, பழைய தலையணை.-அதிலுள்ள பஞ்சை யெடுத்துப் புதிய மெத்தையிலே பொடு. மேலுறையைக் கந்தையென்று வெளியே எறி அந்த வடிவம் அழிந்துவிட்டது . வடிவத்தைக் காத்தால், சக்தியைக் காக்கலாம்: அதாவது சக்தியை, அவ்வடிவத்திலே காக்கலாம். வடிவம் மாறினும் சக்தி மாறுவதில்லை. எங்கும், எதனிலும், எப்போதும், எல்லா விதத் தொழில்களும் காட்டுவது சக்தி. வடிவத்தைக் காப்பது நன்று, சக்தியின் பொருட் டாக. சக்தியைப் போற்றுதல் நன்று, வடிவத்தைக் காக்குமாறு. ஆனல் வடிவத்தை மாத்திரம் போற்றுவோர் சக்தியை இழந்துவிடுவர். பாம்புப் பிடாரன் குழலூதுகின்ருன். 'இனிய இசை சோக முடையது' என்பது கேட் டுள்ளோம். ஆனால், இப் பிடாரன் ஒலிக்கும் இசை மிகவும் இனிய தாயினும் சோக ரஸ்ந் தவிர்ந்தது. இஃதோர் பண்டிதன் தர்க்கிப்பது போலிருக்கின்றது. ஒரு நாவலன் பொருள் நிறைந்த சிறியசிறிய வாக்கி யங்களை அடுக்கிக்கொண்டுபோவது போலிருக்கிறது. இந்தப் பிடாரன் என்ன வாதாடுகிருன்? "தானதந்தத் தானதந்தத் தா - தனத் தானதந்தன தானதந்தன தா - தந்தனத்தன தந்தனத்தன. தா."