பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சித்தம், சித்தம், சித்தம், 124 சக்தி தனக்கே உரிமை யாக்கு - அது சக்தி யென்று வீணைதனில் பேசும் - சித்தம் சக்தி தனக்கே உரிமை யாக்கு - அது சக்திபரி மளமங்கு வீசும். 27 சக்தி தனக்கே உரிமை யாக்கு - அது சக்தியென்று தாளமிட்டு முழக்கும் - சித்தம் சக்தி தனக்கே உரிமை யாக்கு - அது சஞ்சலங்கள் யாவினையும் அழிக்கும். 28 சக்தி தனக்கே உரிமை யாக்கு - அது 'சக்திவந்த கோட்டைகட்டி வாழும் - சித்தம் சக்தி தனக்கே உரிமை யாக்கு - அது சக்தியருட் சித்திரத்தில் ஆழும். 29 சக்தி தனக்கே உடைமை யாக்கு - அது சங்கடங்கள் யாவினையும் உடைக்கும் - மதி சக்தி தனக்கே உடைமை யாக்கு - அங்கு சத்தியமும் நல்லறமும் கிடைக்கும். 30 சக்தி தனக்கே உடைமை யாக்கு - அது சாரவருந் தீமைகளை விலக்கும் - மதி சக்தி தனக்கே உடைமை யாக்கு - அது சஞ்சலப் பிசாசுகளைக் கலக்கும். 31 சக்தி தனக்கே உடைமை யாக்கு - அது சக்தி செய்யும் விந்தைகளைத் தேடும் - மதி சக்தி தனக்கே உடைமை யாக்கு - அது சக்தியுறை விடங்களை நாடும். 32 சக்தி தனக்கே உடைமை யாக்கு - அது தர்க்கமெனுங் காட்டிலச்சம் நீக்கும். மதி சக்தி தனக்கே உடைமை யாக்கு - அதில் தள்ளி விடும் பொய்ந்நெறியும் தீங்கும். 33