பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதி, 125 சக்தி தனக்கே உடைமை யாக்கு - அதில் சஞ்சலத்தின் தீயவிருள் விலகும் - மதி சக்தி தனக்கே உடைமை யாக்கு - அதில் சக்தியொளி நித்தமுநின் றிலகும். 34 சக்தி தனக்கே உடைமை யாக்கு - அதில் சார்வதில்லை ஐயமெனும் பாம்பு - மதி சக்தி தனக்கே உடைமை யாக்கு - அதில் தான் முளைக்கும் முக்திவிதைக் காம்பு. 35 சக்தி தனக்கே அடிமையாக்கு - அது தாரணியில் அன்பு நிலை நாட்டும் - மதி சக்தி தனக்கே அடிமை யாக்கு - அது சர்வசிவ சக்தியினைக் காட்டும். 36 சக்தி தனக்கே அடிமை யாக்கு அது சக்திதிரு வருளினைச் சேர்க்கும் - மதி சக்தி தனக்கே அடிமை யாக்கு - அது தாமதப் பொய்த் தீமைகளைப் போக்கும். 37 சக்தி தனக்கே அடிமை யாக்கு - அது சத்தியத்தின் வெல்கொடியை நாட்டும் - மதி சக்தி தனக்கே அடிமை யாக்கு அது தாக்க வரும் பொய்ப்புலியை ஒட்டும். 38 சக்தி தனக்கே அடிமை யாக்கு - அது சத்தியநல் லிரவியைக் காட்டும் - மதி சக்தி தனக்கே அடிமை யாக்கு - அதில் சாரவரும் புயல்களை வாட்டும். 39 சக்தி தனக்கே அடிமை யாக்கு - அது சக்திவிர தத்தை யென்றும் பூணும் - மதி சக்திவிர தத்தை யென்றுங் காத்தால் - சிவ சக்திதரும் இன்பமும் நல் லூணும். 40