பக்கம்:பாரதியும் கடவுளும்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 உட்கார்ந்திருந்தேன். காலை முதலாகவே வானத்தை மேகங்கள் மூடி மந்தாரமாக இருந்தபடியால் மணல் சுடவில்லை. உச்சிக்கு நேரே ஸ்குரியன். மேகப்படலத்துக் குட்பட்டு சந்தேகத்தால் மறைக்கப்பட்ட ஞானத்தைப் போல் ஒளிகுன்றியிருந்தான். அலைகள் எதிரே மோதின. வடகீழ்த்திசையிலிருந்து சில்லென்று குளிர்ந்த காற்று வீசிற்று. குருட்டு வெயில் கடல்மீது படுவதனால், அலைகளைப் பார்க்கும்போது கொஞ்சம் கண் கூசிற்று. சிறிது தொலைவில் ஒரு வெளிநாட்டு வியாபாரக்கப்பல் வந்து நின்றது. நானும் பொழுது போகாமல், ஒரு தோணிப் புறத்திலேயிருந்து கடலையும் அலையையும் பற்றி யோசனை செய்து கொண்டிருந்தேன். அடா! ஓயாமல், ஓயாமல், எப்போதும் இப்படி ஒலமிடுகிறதே! எத்தனை யுகங்களா யிற்ருே விதியன்ருே இந்தக் கடலை இப்படி ஆட்டுவது? விதியின் வலிமை பெரிது. 'விதியினல் அண்ட கோடிகள் சுழல்கின்றன. விதிப் படியே அணுக்கள் சலிக்கின்றன. மனுஷ்யர், தேவர், அசுரர் முதலிய பல கோடி ஜீவராசிகளின் மனங்களும், செயல்களும் விதிப்படி நடக்கின்றன. இந்த ஸ்குரியன் விதிக்குக் கட்டுப்பட்டிருக்கிருன். மேகங்களெல்லாம் விதிப்படி, பிறந்து, விதிப்படி ஒடி, விதிப்படி மாய்கின்றன. இவ்வாறு யோசனை செய்து கொண்டிருக்கையிலே, அங்கொரு யோகி வந்தார். இவருக்கு வேதபுரத்தார் "கடற்கரை யாண்டி" என்று பெயர் சொல்லுவார்கள். ஏழைகள் இவரைப் பெரிய சித்த ரென்றும், ஞானி யென்றும் கொண்டாடுவார்கள். கண்ட இடத்தில் சோறு வாங்கித் தின்பார். வெயில் மழை பார்ப்பது கிடையாது, சில மாதங்கள் ஒரூரிலிருப்பார். பிறகு வேறெங்கேனும் போய், ஒரிரண்டு வருஷங்களுக்குப்பின் திரும்பி வருவார். இவருடைய தலையெல்லாம் சடை. அரையிலொரு காவித்